இன்று அமெரிக்கா புறப்படுகிறார் முதல்வர் ஸ்டாலின்..!
தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், முதலீட்டாளர்களை சந்திப்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அமெரிக்கா புறப்பட்டுச் செல்கிறார். இன்று இரவு 10 மணிக்கு எமிரேட்ஸ் விமானம் மூலம் சென்னையில் இருந்து புறப்படும் அவர், அமெரிக்காவில் மொத்தம் 17 நாள்கள் தங்குகிறார். இந்த பயணத்தின் போது பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
முதலில், ஆகஸ்ட் 28-ம் தேதி சான்பிரான்சிஸ்கோ செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின், செப்டம்பர் 2-ம் தேதி வரை அங்கு தங்கியிருப்பார். ஆகஸ்ட் 28-ம் தேதி சான் பிரான்சிஸ்கோவில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஸ்டாலின் பங்கேற்கிறார். இந்த மாநாட்டில் சில ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளது என்கிறார்கள். அதன்பின், செப்டம்பர் 2-ம் தேதி சான்பிரான்சிஸ்கோவில் இருந்து சிகாகோ செல்கிறார். அங்கு செப்டம்பர் 12 -ம் தேதி வரை தங்கியிருக்கும் முதல்வர் ஸ்டாலின், முன்னணி நிறுவன முதலீட்டாளர்களை சந்திக்கிறார். சிகாகோவிலும் பல்வேறு முதலீடுகள் தொடர்பான பேச்சுவார்த்தை மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்பின் பயணத்தை முடித்துக் கொண்டு வரும் செப்டம்பர் 12 -ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புகிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88