`UPS-ல் உள்ள ‘U’, மோடி அரசின் youturn-களைக் குறிக்கிறது!’ – புதிய ஓய்வூதியத் திட்டம் குறித்து கார்கே

பழைய ஓய்வூதிய திட்டத்துக்கு மாற்றாக புதிய ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. அப்போதே இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சிகள், அவர்கள் ஆளும் மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டுவந்து, புதிய ஓய்வூதிய முறையை கைவிட்டன. பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் உள்ள அரசு ஊழியர்களும் இதே கோரிக்கைகளை முன்வைத்து வந்தனர். இதனால் மத்திய அரசுக்கு அழுத்தம் ஏற்பட்டது.

மல்லிகார்ஜுன கார்கே

ஆனாலும், பழைய ஓய்வூதிய முறையை மீண்டும் கொண்டு வருவதற்கான எந்த திட்டமும் பரிசீலிக்கப்படவில்லை என்று நிதி அமைச்சகம் உறுதியாக தெரிவித்திருந்தது. இந்த நிலையில்தான், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டத்தை மறுஆய்வு செய்ய, மத்திய நிதித்துறை செயலாளர் டி.வி.சோமநாதன் தலைமையிலான குழுவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அமைத்திருந்தார். அந்தக் குழு வழங்கிய ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அமைச்சரவை, UPS எனும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தன் எக்ஸ் பக்கத்தில், “UPS-ஸில் உள்ள U என்பது மோடி அரசாங்கத்தின் U-டர்ன்களைக் குறிக்கிறது. ஜூன் 4-க்குப் (நாடாளுமன்றத் தேர்தலுக்கு) பிறகு, பிரதமரின் அதிகார ஆணவத்தை விட மக்களின் சக்தி மேலோங்கியுள்ளது.

(சமீபத்தில் மோடி அரசு பின்வாங்கிய திட்டங்களையும் பட்டியலிட்டிருக்கிறார்.)

Long Term Capital Gain / Indexation (நீண்ட கால மூலதன ஆதாயம்/குறியீடு தொடர்பான பட்ஜெட் திரும்பப் பெறப்பட்டது)

Waqf Bill to JPC (வக்ஃப் மசோதா கூட்டு நாடாளுமன்றக் குழுவிற்கு அனுப்பப்பட்டது)

Broadcast Bill (ஒளிபரப்பு மசோதா திரும்பப் பெறப்பட்டது)

பிரதமர் நரேந்திர மோடி

Lateral Entry (மத்திய அரசின் பல்வேறு துறைகளில் இணைச் செயலாளர்கள், இயக்குநர்கள், துணைச் செயலாளர்கள் நேரடி நியமன உத்தரவு திரும்பப் பெறப்பட்டது)

140 கோடி இந்தியர்களை இந்த சர்வாதிகார அரசாங்கத்திடம் இருந்து பாதுகாப்போம்” என்று பதிவிட்டிருக்கிறார்.