ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் அக்டோபர் 1-ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. பெருவாரியான விவசாய வாக்களார்கள் இருக்கும் ஹரியானா மாநிலத்தில் தேர்தலுக்கானப் பணிகளை மாநிலக் கட்சிகள் தீவிரமாக செய்துவருகின்றன. இந்த நிலையில், இமாச்சல் பிரதேசத்தின் மண்டி தொகுதியின் எம்.பி-யுமான கங்கனா ரனாவத், விவசாயிகள் குறித்து தெரிவித்திருக்கும் கருத்துகள் ஹரியானா, பஞ்சாப் மாநில பா.ஜ.க-வை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
சமீபத்தில் கங்கனா ரனாவத் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்தப் பேட்டியில்,“மத்திய அரசின் புதிய வேளாண்மைச் சட்டத்துக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது மோடி அரசின் வலுவான நடவடிக்கைகள் இல்லாவிட்டால், இந்தியாவை வங்காளதேசத்தில் நடந்தது போன்ற சூழலை உருவாக்கியிருப்பார்கள். அந்தப் போராட்டத்தின் போது தூக்கிலிடுதலும், பாலியல் வன்கொடுமைகளும் நடந்தன. அந்த சட்டங்கள் திரும்பப் பெறப்பட்ட பிறகும் போராட்டங்கள் தொடர்ந்ததற்கு வெளிநாட்டு சதிகள்தான் காரணம். சினிமா துறையில் இருப்பவர்கள், இந்த நாடு நாய்களின் கைகளுக்கு சென்றாலும் கவலையில்லை என்றே இருக்கிறார்கள்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
கங்கனா ரனாவத்தின் இந்தக் கருத்துக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் வலுத்தன. இந்த நிலையில், பஞ்சாப் பா.ஜ.க மூத்த தலைவர் ஹர்ஜித் கரேவால், “மாண்டி எம்.பி கங்கனா ரனாவத், எரிச்சலூட்டும் அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும். விவசாயிகளைப் பற்றிப் பேசுவது கங்கனாவின் துறை அல்ல, கங்கனாவின் அறிக்கை அவரின் தனிப்பட்ட கருத்து.
பிரதமர் மோடியும் பா.ஜ.க-வும் விவசாயிகளுக்கு பல்வேறு சிறப்புகளை முன்னெடுத்திருக்கிறது. ஆனால், எதிர்க்கட்சிகள் எங்களுக்கு எதிராகச் செயல்படுகின்றன. கங்கனாவின் அறிக்கையும் அதைத்தான் செய்கிறது. எனவே, கங்கனா ரனாவத் உணர்ச்சிப்பூர்வமான, மதம் சார்ந்த கருத்துகளை அவர் வெளியிடக் கூடாது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88