கடந்த 24-ம் தேதி, சென்னையில் நடைபெற்ற அமைச்சர் எ.வ.வேலுவின் `கலைஞர் எனும் தாய்’ நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் `அசாத்தியமான சீனியர்களை சாதுர்யமாக கையாள்கிற ஸ்டாலினுக்கு ஹேட்ஸ் ஆஃப் டு யூ’ என தனக்கே உரித்தான பாணியில் பேசி, அரங்கையே கலகலப்பாக்கினார். அவர் பேசும்போது, மூத்த அமைச்சர் துரைமுருகன் பெயரைக் குறிப்பிட்டு `கலைஞர் கண்களிலேயே விரல் விட்டு ஆட்டியவர்’ என்று தனது அனுபவங்களையும் `நச்’ என்று பகிர்ந்தார்.
ரஜினியின் பேச்சு குறித்த கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன், நேற்று காட்பாடியில் செய்தியாளர்களைச் சந்திக்கும்போது, “வயசாகிப்போய், பல் விழுந்த பிறகும் நடிப்பதில்லையா?!’’ என விமர்சித்தார்.
இதையடுத்து, இன்று சென்னை விமான நிலையத்தில் பேசிய ரஜினிகாந்த் “துரைமுருகன் எனக்கு நீண்டகால நண்பர். அவர் என்னச் சொன்னாலும் எனக்கு வருத்தம் கிடையாது’’ என்றார்.
இந்த விவகாரம் பெரிதுப்படுத்தப்பட்டால், காட்பாடியில் நடைபெற்ற கலைஞரின் நூற்றாண்டு விழாவில் கவிஞர் வைரமுத்து, முரசொலி செல்வம் ஆகியோருடன் அமர்ந்திருந்த துரைமுருகன் அவசர அவசரமாக வெளியே எழுந்து சென்று செய்தியாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
செய்தியாளர்களிடம், “எங்கள் நகைச்சுவையை யாரும் பகைச்சுவையாக பார்க்க வேண்டாம். நாங்கள் எப்போதும்போல நண்பர்களாக இருப்போம்’’ என பதற்றத்திலேயே பேட்டிக்கொடுத்துவிட்டு நிகழ்ச்சி அரங்கிற்குள் திரும்பிச் சென்றார் அமைச்சர் துரைமுருகன்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88