சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஒப்பந்ததாரர் கந்தசாமி. இவர், திருப்பூர் மாநகராட்சியில் சாலை போடும் பணியை ஒப்பந்தம் எடுத்து செய்து வருகிறார். தற்போது ரூ.1 கோடி மதிப்பிலான சாலை அமைக்கும் பணியை கந்தசாமி மேற்கொண்டு வருகிறார்.
இந்தப் பணிக்கான பில்லில் கையழுத்து போட்டு பாஸ் செய்வதற்கு, திருப்பூர் மாநகராட்சியின் நான்காவது மண்டலத்தில் இளநிலைப் பொறியாளராகப் பணியாற்றி வரும் சுரேஷ், ஒப்பந்ததாரர் கந்தசாமியிடம் ரூ.4 லட்சம் லஞ்சமாக கேட்டுள்ளார். இதையடுத்து, ஒப்பந்ததாரர் கந்தசாமி இளநிலைப் பொறியாளர் சுரேஷுக்கு கடந்த வாரம் ரூ.2 லட்சம் லஞ்சமாக கொடுத்துள்ளார்.
மீதமுள்ள ரூ.2 லட்சத்தைக் கொடுத்தால்தான் பில்லை பாஸ் செய்ய முடியும் என்று கந்தசாமியிடம் பொறியாளர் சுரேஷ் கூறியுள்ளார். இதுகுறித்து ஒழிப்புத் துறையினரிடம் கந்தசாமி புகார் அளித்துள்ளார். அவர்களின் ஏற்பாட்டில் ரசாயனம் தடவிய ரூ.1 லட்சம் ரூபாயை நோட்டுகளை ஒப்பந்ததாரர் கந்தசாமி பொறியாளர் சுரேசிடம் வழங்கியபோது மறைத்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளர் ராஜேஷ் மற்றும் ஆய்வாளர் சசிரேகா ஆகியோர் பொறியாளர் சுரேஷை செய்தனர். பில்லை பாஸ் செய்வதற்கு 4 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்ட பொறியாளர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88