“பாஜக-வுடன் நெருக்கம்… லாபக் கணக்குபோடும் திமுக..!” – செல்லூர் ராஜூ பளார்

`சசிகலா மற்றும் ஓ.பி.எஸ் ஆகியோரை அ.தி.மு.க-வில் இணைப்பது கட்சியின் எதிர்காலத்துக்கு நல்லது என்கிறார்களே..!”

“இந்த கேள்வியை எழுப்பும் நிருபருக்கு தெரியும் விவகாரங்கள் எங்கள் பொதுச் செயலாளர் தெரியாமல் இருக்குமா? எங்கள் கட்சிக்கு எது நல்லது.. ஆட்சிக்கு வர வியூகமென்ன என்பதெல்லாம் எங்கள் எடப்பாடியாருக்கு தெரியும். அரசியலில் எதையும் அறுதியிட்டு கூற முடியாது. இப்போதிருக்கும் அரசியல் கட்சிகளின் கூட்டணி நிலைப்பாடுகள்கூட மாறலாம். தி.மு.க கூட்டணிக் கட்சிகள் இன்னும் எவ்வளவு நாளைக்கு அங்கேயே இருப்பார்கள் எனப் போகப் போகத்தான் தெரியும்..!”

செல்லூர் ராஜூ

`பா.ஜ.க தி.மு.க இணக்கம் காட்டுவதாக சொல்கிறீர்கள்.. ஆனால் பா.ஜ.க-வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற கருத்து அ.தி.மு.க-வுக்குள் இருக்கிறதே..!”

“பா.ஜ.க-வுடன் கூட்டணி வைக்க வேண்டும் எந்த கருத்தும் கட்சிக்குள் இல்லை. எங்கள் பொதுச்செயலாளர் புரட்சி தமிழர் எடப்பாடியார் என்ன சொல்கிறாரோ, அதுதான் கட்சியின் கருத்து. பா.ஜ.க-வுக்கான எதிர் நிலைப்பாட்டில் அ.தி.மு.க உறுதியாகத்தான் இருக்கிறது. ஆனால் பா.ஜ.க அரசை வலுவாக தி.மு.க-தான் எதிர்க்கவில்லை. கடுமையாக சாடியவர்கள் இப்போது மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அழைத்து விழா நடத்தி நெருக்கம் காட்டுகிறார்கள்.

`அடிப்பதுபோல் அடிக்கிறேன் அழுவதுபோல் அழுங்கள்’ என்ற யுக்திதான் தி.மு.க-வினுடையது. மக்கள் பிரச்னையில் என்றுமே அக்கறை கொள்ளாமல் அரசியல் லாபத்தை கணக்குபோடும் கட்சி தி.மு.க என்பதை மீண்டும் நிருபிக்கிறார்கள்.”

“தி.மு.க அமைச்சர்களை சாடுவது சரி.. அண்ணாமலையை விமர்சிக்க வேண்டிய கட்டாயம் என்ன?”

` `தாயை பழித்தவனை ஆண்டவனே தடுத்தாலும் விடாதே’ எனச் சொல்வார்கள். அம்மாவை விமர்சித்துப் பேசிய தி.மு.க அமைச்சர் அன்பரசனை வேடிக்கை பார்க்க சொல்கிறீர்களா.. இதே காரணத்துக்காகத்தான் அண்ணாமலையை ஒருமையில் திட்டினேன். அதோடு அ.தி.மு.க எங்கள் தலைமையேற்றால் கூட்டணியில் சேர்த்துக் கொள்கிறோம்’ என்கிறார் அண்ணாமலை. பா.ஜ.க-வை விட அ.தி.மு.க பலவீனமடைந்திருந்தால்கூட அவர் அப்படி பேசலாம். ஆனால் எதுவுமே இல்லாமல் எங்களை பேசினால் கோபம் வரத்தான் செய்யும். என்னை கேட்டால் சுயநலத்தோடு பா.ஜ.க எனும் கட்சியை கருவியாக பயன்படுத்துகிறார். இது பா.ஜ.க-வின் அகில இந்திய தலைமைக்கு தெரியவில்லை.”

“சீனியர்களின் அதிகாரத்தை குறைத்திடும் நோக்கத்தில் `இரு தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர்` என எடப்பாடி கணக்கு போடுவதாக சொல்கிறார்களே!”

“யூகங்களுக்கெல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது.”

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88