ராஜபாளையத்தில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உருவப்படத்துக்கு பன்னீர் அபிஷேகம் செய்த பெண் – பின்னணி என்ன?

தமிழக வருவாய்துறை அமைச்சர் கே‌.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கில் போதிய ஆதாரங்கள் நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி, அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோரை மாவட்ட நீதிமன்றம் விடுதலை செய்திருந்தது.

ராஜபாளையத்தில்..

இந்தநிலையில், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமைச்சர்கள் சொத்துக்குவிப்பு வழக்கில், மாவட்ட நீதிமன்றம் அளித்த தீர்ப்பு நீதிமன்றத்தின் மனசாட்சியை உலுக்குவதாக உள்ளதென தெரிவித்திருந்தவர், அமைச்சர்களான தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் ஆகியோரின் விடுதலை செய்யப்பட்ட வழக்கினை தாமாக முன்வந்து மறு விசாரணைக்கு எடுத்துக்கொண்டார்.

தொடர்ந்து, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் நடைபெற்று வந்த இந்த சொத்துக்குவிப்பு வழக்கில், அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டது செல்லாது. லஞ்ச ஒழிப்புத்துறை மறுபடியும் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும்‌. அமைச்சர்கள் இருவரும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனக்கூறி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பரபரப்பு தீர்ப்பளித்தார்.

போலீஸ்..

அமைச்சர்கள் சொத்துக்குவிப்பு வழக்கு மீதான தனி நீதிபதியின் இந்த தீர்ப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு சமூகவலைதளங்களில் பலரும் வரவேற்பை தெரிவித்து வருகின்றனர். அதேசமயம், ஆளுங்கட்சி அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு மீண்டும் தூசித்தட்டி விசாரணைக்கு எடுக்கப்படுவது அரசியல்மட்டத்திலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷனை பாராட்டி அவரின் உருவப்படத்திற்கு ராஜபாளையத்தை சேர்ந்த சமூக சேவகி நர்மதா நந்தகுமார், பன்னீர் அபிஷேகம் செய்த சம்பவம் விருதுநகர் மாவட்டத்தில் வைரலாக பரவியது.

நர்மதா

இதுகுறித்து, போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், “ராஜபாளையத்தில் பட்டப்பகலில் காந்தி சிலை முன்பு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷன் உருவப்படத்திற்கு பெண் ஒருவர் பன்னீர் அபிஷேகம் செய்வதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் ராஜபாளையம் தெற்கு காவல்நிலைய போலீஸார் விரைந்து சென்று அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் சமூக சேவையில் ஈடுபடும் நர்மதா நந்தகுமார் என்பதும், லஞ்சம், ஊழலுக்கு எதிரான வழக்கில் துணிச்சலுடன் செயல்படும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷனை பாராட்டுவதற்காக அவரின் உருவ படத்திற்கு பன்னீர்‌ அபிஷேகம் செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை, காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்ற போலீஸார், நர்மதாவுக்கு அறிவுரை கூறி எச்சரித்து அனுப்பி வைத்தனர்” என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88