அமைச்சர் முன்னிலையில் திருமணம் செய்துகொண்ட மாற்றுத்திறனாளி தம்பதிக்கு, ஓராண்டு மேலாகியும் உதவித்தொகை கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டுடன் மாவட்ட ஆட்சியரிடத்தில் மனு அளிக்க வந்திருந்தார் ஒரு பெண்மணி. இதுகுறித்து ஆட்சியர் அலுவலக அலுவலகத்துக்கு வந்த மேலையூரை சேர்ந்த இந்திராணியிடம் பேசினோம்… “மேலையூரை சேர்ந்தவர் மணி முருகன், மாற்றுத்திறனாளி. இவருக்கும், காரியாபட்டியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண்ணும், எனது மகளுமான மேகலா என்பவருக்கும் தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோர் கூட்டமைப்பின் அறக்கட்டளை மூலமாக திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து இவர்களின் திருமணம், சென்னை கோயம்பேட்டில் உள்ள குறுங்காலீஸ்வர சுவாமி திருமண மண்டபத்தில், இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் கடந்த 2023 ஆண்டு ஏப்ரல் 27-ம்தேதி நடைபெற்றது. இதன்பின்பு மாற்றுத்திறனாளி தம்பதிகளாக திருமண உதவித்தொகைக்கேட்டு அவர்கள் விண்ணப்பம் செய்தனர். அப்போது, இந்த மனு மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரையும் செய்யப்பட்டது. தொடர்ந்து, 2023 மே 15-ல் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் முகாமிலும் மனு அளித்தோம். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மருமகன் மணி முருகன் பெட்ரோல் பங்கில் பணிபுரிகிறார். மகள் மேகலாவிற்கு தற்போது ஐந்து மாதத்தில் குழந்தை உள்ளது. இவர்கள் மாற்றுத்திறனாளி திருமண உதவித் தொகைக்கு விண்ணப்பித்தனர். ஆனால் முந்தைய விண்ணப்பம் தவறிவிட்டதாகவும், தற்போது 10 ஆவணங்களை கொடுத்து புதிதாக விண்ணப்பிக்க வேண்டும் என அதிகாரிகள் கூறுகின்றனர். அமைச்சர் சேகர்பாபு நடத்திய வைத்த திருமணத்திற்கு ஓராண்டாகியும் உதவி தொகை பெற முடியாதது வருத்தமளிக்கிறது” என இந்திராணி தெரிவித்தார்.
இந்த நிலையில் மீண்டும், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுப்பதற்காக வந்துள்ளதாக அவர் கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88