ILO: உலகளாவிய இளைஞர் வேலையின்மை விகிதம் 15 ஆண்டுகளில்… அறிக்கை சொல்வதென்ன?!

ILO (International Labour Organization) என்பது தொழிலாளர் சிக்கல்களை நிர்வகிக்கும் ஐக்கிய நாடுகள் அவையின் சிறப்பு நோக்கங்கொண்ட முகமையாகும். சர்வதேச தொழிலாளர் அமைப்பான இது, இந்த ஆண்டுக்கான ‘இளைஞர்களுக்கான உலகளாவிய வேலைவாய்ப்புப் போக்குகள் 2024’ என்ற தனது அறிக்கையினை வெளியிட்டுள்ளது.

கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு மனித குலம் மீண்டும் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியும், தொழிலாளர் தேவை மற்றும் வலுவான எழுச்சியையும் அடைந்துவருகிறது. கடந்த சில ஆண்டுகளாக சில முன்னேற்றங்கள் இருந்தாலும் உலகளாவிய இளைஞர் வேலையின்மை விகிதம் 15 ஆண்டுகளாக மிகக் குறைந்த அளவிலேயே உள்ளது என இந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இளைஞர்கள்

`பிராந்திய அளவிலான ஏற்றத் தாழ்வுகள் இருந்தபோதும், உலகளாவிய இளைஞர் வேலையில்லா திண்டாட்டம் 15 ஆண்டுகளாக தொடர்ந்து குறைந்து வருகிறது.’ என ஐ.நா சபை திங்களன்று தெரிவித்தது. ஆனால் இதில் ஆசியா பின்தங்கியுள்ளது, என்று ILO வின் அறிக்கை கூறுகிறது. 

15 முதல் 24 வயதுடைய இளைஞர்களை தங்களின் வேலைக்காக எதிர்கொள்ளும் சவால்களையும் குறிப்பிட்டுள்ளது. வேலைவாய்ப்பு, கல்வி அல்லது பயிற்சியில் (NEET-Not in Education, Employment,or Training ) இல்லாத இளைஞர்களின் எண்ணிக்கை கவலையளிக்க்கும் வகையில் இருக்கிறது எனவும், 2023 ஆம் ஆண்டில்,உலக அளவில் ஐந்து இளைஞர்களில் ஒருவர் NEET நிலையில் உள்ளார் எனவும், இவர்களில் மூன்றில் இருவர் பெண்கள் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இளம்பெண்களின் உலகளாவிய இளைஞர் NEET விகிதம் இளைஞர்களை விட (முறையே 28.1 சதவீதம் மற்றும் 13.1 சதவீதம்) இரட்டிப்பாகிருக்கிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலை…

வளர்ந்து வரும் மற்றும் வளரும் பொருளாதாரங்களில் வேலைகளுக்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. மேலும் இளம் தொழிலாளர்கள் பலர் முறைசாரா வேலையில் உள்ளனர் என்றும் அறிக்கை நமக்கு சுட்டிக்காட்டுகிறது. 

இளைஞர்களுக்கான வாய்ப்புகள் மிகவும் சமமற்றவை என்பதை அறிக்கை நமக்கு நினைவூட்டுகிறது என்கிறார்கள். பல இளம் பெண்கள், குறைந்த நிதி வசதி கொண்ட இளைஞர்கள் மற்றும் சிறுபான்மை பின்னணியில் இருந்து இன்னும் பலர் வேலை தொடர்பான விஷயங்களில் கடுமையாக போராடிக் கொண்டிருக்கின்றனர். மேலும் கிடைக்கக்கூடிய பெரும்பாலான வேலைகள் ‘தற்காலிகமானவை மற்றும் சமூகப் பாதுகாப்பு இல்லாதவாறு’ இருக்கின்றன எனவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

“உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான இளைஞர்கள் வேலை இல்லாமல், பாதுகாப்பற்றவர்களாகவும், தங்களுக்கும் தங்கள் குடும்பங்களுக்கும் ஒரு சிறந்த வாழ்க்கையை உருவாக்க முடியாதவர்களாகவும் இருக்கும்போது, நிலையான எதிர்காலத்தை நாம் எவரும் எதிர்நோக்க முடியாது” என்று ILO தலைவர் கில்பர்ட் சுட்டிக்காட்டுகின்றார். 

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88