“கொடியை அறிவித்து மாநாடு நடத்த ஆயத்தமாகிறது தமிழக வெற்றிக் கழகம்.. விஜய்யை எதிர்கொள்ள தி.மு.க தயாரா?”
“2036-ல் ஒலிம்பிக் போட்டியை குஜராத்தில் நடத்த வேண்டுமென இந்தியாவுக்கு விருப்பம் இருந்தாலும் அங்குள்ள விவசாயிகள் எதிர்ப்பதாக சொல்கிறார்கள். இதைப்போல விஜய்க்கும் ஜனநாயக நாட்டின் ஒரு ஆசை இருக்கலாம். வரட்டும் பார்க்கலாம். கொள்கைகளையும் திட்டங்களையும் அறிவிக்கட்டும், பின்னர் அவரை எதிர்ப்பதா.. ஆதரிப்பதா.. என்பதை தலைமை முடிவு செய்யும்”
“நா.த.க-வினர் கருணாநிதியை விமர்சித்தால் கொதிக்கிறீர்கள்… கருணாநிதியென்ன விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்களா?”
“கலைஞர் விமர்சனத்துக்கு அப்பாற்றட்டவர் இல்லை என்பதை ஏற்கிறேன். ஆனால் நாம் தமிழர் கட்சியினர் கலைஞரை எந்த காரணத்துக்காக விமர்சிக்கிறார்கள்.. அவரின் எந்த திட்டத்தை விமர்சிக்கிறார்களா.. தமிழ்நாட்டின் இப்போதைய சட்டம் ஒழுங்கு நிலைக்கும், மின்கட்டண உயர்வுக்கு கலைஞரா காரணம்? சீமானுக்கு கலைஞரை திட்ட வேண்டுமென்ற வன்மமும் சாதிவெறியும் இருக்கிறது. ஈழ விவகாரத்தில் கலைஞரை குற்றப்படுத்துகிறார்கள். அதுகுறித்து சீமானுடன் விவாதிக்க தயாராக இருக்கிறேன்”
“தி.மு.க ஆட்சியில் காவல்துறையில் செயல்பாடுகள் கடும் விமர்சனத்துக்குள்ளாகிறதே… எண்ணற்ற அரசியல் படுகொலையும் நடக்கின்றனவே!”
“கொலை குற்றங்கள் எண்ணிக்கையளவில் குறைந்துவருகிறதென்றாலும் அதனை நியாயப்படுத்த விரும்பவில்லை. ஆனால் தனிமனித பகையினால் அரங்கேறும் கொலைகளை காவல்துறை தடுக்கவில்லை என விமர்சிப்பதை ஏற்க முடியாது. அரசியல் படுகொலை என அடையாளப்படுத்தப்படுவதும் தனிமனித பகையாகவே இருக்கின்றன. ஆம்ஸ்ட்ராங் கொலைக்கான பின்னணியும் அதுதானே தவிர சமூக மற்றும் அரசியல் காரணங்களல்ல.”
“`உதயநிதிக்கு துணை முதலமைச்சராகும் தகுதியும் முதிர்ச்சியும் இன்னும் வரவில்லை என்கிற தொனில் அமைந்திருக்கிறதே முதல்வர் ஸ்டாலினின் `வலுத்திருக்கிறது, ஆனால் பழுக்கவில்லை’ என்ற கருத்து…”
“அண்ணன் உதயநிதி துணை முதலமைச்சராக வேண்டும் என்பது வலுவான கோரிக்கையாக மாறியிருக்கிறது, காலம் வரும்போது அதற்கான அறிவிப்பு வரும் என்கிற ரீதியில்தான் முதலமைச்சரின் பதிலை எடுத்துக் கொள்ள வேண்டும். மற்றபடி முதிர்ச்சி மற்றும் தகுதி குறித்த கேள்விக்கான பதில் அதுவல்ல. சனாதன எதிர்ப்பிலும் மிக உறுதியாக இருந்து பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்துத்வா அமைப்புகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்பவரின் தகுதியை கேள்விக்குள்ளாக்குவது ஏற்புடையதல்ல.”
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88