உத்தரப்பிரதேசத்தில் இறந்தவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வாக்குமூலம் சேகரித்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த விசித்திர சம்பவம் ஒன்று அரங்கேறியிருக்கிறது. முன்னதாக, பிரகாஷ் என்பவர் புருஷோத்தம் சிங் மீது புகாரளித்ததாக 2014-ல் குஷிநகர் மாவட்டத்திலுள்ள கோட்வாலி ஹடா காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.
அதையடுத்து, போலீஸ் இதில் விசாரணை மேற்கொண்டு புகார் அளித்த பிரகாஷிடம் வாக்குமூலம் பதிவுசெய்து, அவரை அரசு தரப்பு சாட்சியாகக் குறிப்பிட்டு, அதே ஆண்டு நவம்பர் 23-ம் தேதி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது. ஆனால், இந்த வழக்கு தற்போது அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு வந்தபோதுதான் இதில் மிகப்பெரிய தவறு நடந்திருப்பது தெரியவந்திருக்கிறது.
அதாவது, பிரகாஷின் இறப்புச் சான்றிதழ் மற்றும் அவரின் மனைவியின் சாட்சியம் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ பதிவுகளின்படி 2011 டிசம்பர் 19-ம் தேதியே பிரகாஷ் இறந்துவிட்டார் என்பது தெரியவந்திருக்கிறது. இதன்மூலம், விசாரணையின்போது பிரகாஷ் உயிரோடிருப்பது போல காண்பிக்கப்பட்டு, புகார் அளிக்கப்பட்டு வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது என்று நீதிமன்றம் கண்டுபிடித்தது.
அதையடுத்து, இந்த வழக்கில் புருஷோத்தம் சிங்குக்கு எதிரான குற்றவியல் நடவடிக்கைகளை ரத்து செய்த உயர் நீதிமன்ற நீதிபதி சவுரப் ஷியாம் ஷாம்ஷேரி, “இறந்த ஒருவர் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்தது மட்டுமின்றி, விசாரணை அதிகாரி முன் தனது வாக்குமூலத்தையும் பதிவு செய்திருப்பது மிகவும் விசித்திரமானது. அதுமட்டுமின்றி குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இவையனைத்தையும் பார்க்கும்போது இந்த நடவடிக்கைகள் அனைத்தும் ஆவியால் செய்யப்பட்டது போல தெரிகிறது” என்றார். மேலும், இந்த வழக்கின் விசாரணை அதிகாரிகளிடம் விசாரணை நடத்துமாறு குஷிநகர் காவல் கண்காணிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88