SC 75: உச்ச நீதிமன்ற அரங்கில் திரையிடப்படும் `Laapataa Ladies’… சந்திரசூட், அமிர் கான் பங்கேற்பு!

உச்ச நீதிமன்றம் நிறுவபட்டு 74 ஆண்டுகள் முடிந்து தற்போது 75-ம் ஆண்டு வைர விழா கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றன. அதன் ஒருபகுதியாக லோக் அதாலத் எனும் மக்கள் மன்றம் முதல் பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் உச்ச நீதிமன்றத்தால் முன்னெடுக்கப்படுகிறது. அதன் ஒருபகுதியாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் அதன் பதிவுத்துறை அதிகாரிகள் பங்கேற்கும் திரையிடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த திரையிடலுக்காக சமீபத்தில் வெளியாகி பல தரப்பு பாராட்டுகளைப் பெற்ற ‘லாபடா லேடீஸ்’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.

லாபத்தா லேடீஸ்

அடிப்படை தொழில்நுட்பம் இல்லாத காலகட்டத்தை பின்னணியாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படம், இரண்டு மணப்பெண்களின் வாழ்க்கையையும், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் மையப்படுத்தி பாலின சமத்துவம் குறித்து நேர்மையாக பேசுவதாக பாராட்டப்பட்டது.

இந்த திரையிடல் குறித்து உச்ச நீதிமன்றத்தின் நிர்வாகப் பிரிவால் வெளியிடப்பட்ட தகவல்களின்படி, “இந்திய உச்ச நீதிமன்றம் நிறுவப்பட்ட எழுபத்தைந்தாவது ஆண்டை கொண்டாடும் விதமாக, ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகளின் ஒரு பகுதியாக, பாலின சமத்துவத்தின் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்ட ‘லாபடா லேடீஸ்’ திரைப்படம் ஆகஸ்ட் 9, 2024 வெள்ளிக்கிழமை (இன்று) திரையிடப்படும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறது.

இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட்

இந்த நிகழ்வில் இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான அமீர் கான், லாபடா லேடீஸ் படத்தின் இயக்குநரான கிரண் ராவ் ஆகியோர் காலந்துகொள்வார்கள் என்ற தகவலும் வெளியாகியிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88