சேலம்: மனைவியை வீடியோ எடுத்து, மிரட்டி பாலியல் தொழிலில் தள்ளிய கணவன் – தற்கொலைக்கு முயன்ற புதுப்பெண்

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள முல்லைவாடி பகுதியை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். இவருக்கு கடந்த 4 மாதத்திற்கு முன்பு சேலம் உடையாபட்டியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவருடன் திருமணம் நடந்தது. கடந்த 3-ம் தேதி ஆடிப்பெருக்கு விழாவுக்காக ஆத்தூரில் உள்ள தாய் வீட்டிற்கு வந்த இளம் பெண் 5-ம் தேதி மாலை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை உறவினர்கள் மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மலர்கொடி தலைமையிலான போலீஸார் இளம் பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது கண்ணீருடன் அவர் போலீஸில் பகீர் தகவலை தெரிவித்தார். அதில், ”சேலத்தில் உள்ள தனியார் பால் நிறுவனத்தில் வாட்ச்மேனாக பணியாற்றி வரும் தமிழ்ச்செல்வனுடன் எனக்கு 4 மாதத்திற்கு முன் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு உடையாபட்டி அருகே தனியாக வீடு எடுத்து வசித்து வந்தோம். நாங்கள் தனிமையில் இருந்தபோது, எனது நிர்வாண படங்களை கணவர் செல்போனில் எடுத்துள்ளார். இதை அறிந்த நான், அவரது செல்போனை எடுத்து பார்த்த போது அவருடன் நெருங்கிப் பழகும் பல பெண்களின் நிர்வாண படங்களையும் அதில் வைத்திருந்தார்.

ஆபாச வீடியோ

அதனை தட்டிக்கேட்ட என்னை அவர் அடித்து துன்புறுத்தினார். மேலும் எனது படத்தையும் அவரது நண்பர்கள் பலருக்கு அனுப்பி வீட்டிற்கு அழைத்து வந்து பகலிலேயே அவர்களுடன் உடலுறவு வைத்துக் கொள்ள சொல்லி அடித்து கொடுமைப்படுத்தினார். அதனையும் படமாக எடுத்து வைத்துள்ளார். இதனை பெற்றோரிடம் சொன்னால் அவர்களையும் என்னையும் கொன்று விடுவேன் என மிரட்டியதால் சொல்லாமல் இருந்தேன். ஆடி பண்டிகைக்கு வந்தபோது, நடந்ததை பெற்றோர் தெரிந்து கொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் வீட்டிற்கு வந்த கணவன் தமிழ்ச்செல்வனை தாக்கினர்.இதனால் தெருவில் உள்ளவர்களுக்கும் விஷயம் தெரிந்து விட்டதால் அவமானம் அடைந்த நான் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றேன்” என கூறினார்.

தற்கொலைத் தடுப்பு மையம்

இதையடுத்து போலீஸார் அப்பெண்ணின் கணவன் தமிழ்ச்செல்வன் மற்றும் அவருடன் நெருக்கமாக இருந்த மூன்று பேர் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து கணவன் தமிழ்ச்செல்வனை போலீஸார் கைது செய்தனர். மேலும் அதில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள ஆண்டுகளூர்கோட்டை சேர்ந்த நடராஜன் என்பவரையும், போலீஸார் கைது செய்தனர். கைதான தமிழ்ச்செல்வனிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், மனைவியுடன் உல்லாசமாக இருப்பதை வீடியோ எடுத்து அதனை தெரிந்த நபர்களுக்கு அனுப்பி, அவர்களை வரவழைத்து மனைவியுடன் தனிமையில் இருக்க பணம் பெற்றுக் கொண்டது தெரிய வந்தது. கைதான தமிழ்ச்செல்வன், நடராஜனை போலீஸார் ஆத்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இவ் வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88