பூ வியாபாரிகள் முதல் புல்டோசர்கள் ஓட்டுபவர்கள் வரை எங்கெங்கு காணினும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை காண முடிகிறது. யூ.பி.ஐ மூலம் க்யூ.ஆர் கோடை பயன்படுத்தி பணப் பரிவர்த்தனை நடத்த பல்வேறு நிறுவனங்கள் இருந்தாலும், பெரும்பாலான சிறு , குறு வணிகர்களிடையே பேராதரவைபெற்று இயங்கி வரும் இப்போபே நிறுவனம் சுமார் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. கடைக்கோடி ராமேஸ்வரத்தில் மீனவ குடும்பத்தில் பிறந்த மோகன் கருப்பையா அவர்களால் உருவாக்கப்பட்ட இந்நிறுவனம் பல்வேறு அடித்தட்டு வணிகர்களை சென்றடைந்ததில் அவரின் நிதி செயல்பாடுகளின் தனித்துவத்தில் மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை காட்டுகிறது.
தமிழிலும் வாடிக்கையாளர் சேவை மையத்தைக் கொண்டிருக்கும் ஒரே டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை நிறுவனம் இப்போபே. இதன் காரணமாக, தமிழ்நாட்டின் பல்வேறு குக் கிராமங்களை சென்று அடைந்திருக்கும் இந்நிறுவனம் தற்போது அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் தன் சேவையை விரிவுபடுத்தி உள்ளது. என்.பி.சி.ஐ எனும் இந்திய தேசிய பணப்பரிமாற்ற நிறுவனத்திடமிருந்து அனுமதி பெற்றுள்ள இந்த நிறுவனம் மக்களின் பாதுகாப்பான பண பரிமாற்றத்திற்கு நம்பிக்கையூட்டுகிறது.
நிதி தொழில்நுட்பத் துறையில் வேகமாக வளர்ந்து வரும் இந்நிறுவனம் இந்தியாவின் மிகச்சிறந்த தொழில் முனைவோராக கருதப்படும் மிதுன் சஞ்சீட்டி (Founder of CaratLane) மற்றும் சித்தார்த் சஞ்செட்டி (CEO of Jaipur Gems) ஆகியோரிடம் இருந்து முதலீட்டை பெற்றுள்ளது.
இது குறித்து இப்போபே நிறுவனத்தின் சி.இ.ஓ மோகன் கருப்பையா கூறுகையில், “இதுபோன்று மாபெரும் தொழில் முனைவர்களாக இயங்கிக் கொண்டிருப்பவர்கள் எங்கள் நிறுவனத்தின் முதலீடு செய்வது எங்கள் வியாபார யுத்திகள் சரியான திசையில் போய்க் கொண்டிருக்கிறது என்பதை உணர்த்துகிறது. இது மென்மேலும் எங்களுக்கு பொறுப்பையும் நம்பிக்கையும் ஊட்டுகிறது .இனி வரும் காலங்களில் இப்போபே மேலும் பன்மடங்கு சிறந்து செயல்பட்டு பல்வேறு அடித்தட்டு மக்களின் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையில் பெரும் பொறுப்பும் நம்பிக்கையும் பெறும் என்பதில் எங்களுக்கு எந்த ஐயமும் இல்லை” என்கிறார் .
மோகன் கருப்பையாவுடன் இணைந்திருப்பதுப் குறித்து பெருமையாக பேசும் மிதுன் சஞ்சீட்டி, “இப்போபேயுடன் கைகோர்ப்பதில் நாங்கள் உற்சாகம் கொள்கிறோம். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வங்கி சேவைகளைப் பெறுவதற்கும், முதலீடுகளைப் பெறுவதற்கும், பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கும் சில வழிமுறைகளைக் கடைப்பிடித்து வந்தன. அவற்றை மேம்படுத்துவதற்கு மோகன் கருப்பையா கொண்டிருந்த தொலைநோக்குப் பார்வையும் அர்ப்பணிப்பும் என்னை மிகவும் ஈர்த்தது. இந்தியாவில் நிலையான நிதித் தொழில்நுட்பத் (fintech) தளத்தை உருவாக்கும் இப்போபேயின் திறன் மீது நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம்” என தெரிவித்துள்ளார்.