Isreal: `காஸாவில் 2 மில்லியன் மக்கள் பசியால் இறக்க நேரிட்டாலும்..!’ – இஸ்ரேல் அமைச்சர் சொல்வதென்ன?

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே ஒருவருடமாக தொடர்ந்து போர் நடந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலிய தாக்குதலில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டதாகவும், 71 பேர் காயமடைந்ததாகவும் காஸாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் குறைந்தது 39,623 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். 91,469 பேர் காயமடைந்ததாக அதிகாரப்பூரவமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

காஸா

இந்த நிலையில், இஸ்ரேலின் நிதி அமைச்சரும், தீவிர வலதுசாரி ஆதரவாளருமான பெஜலெல் ஸ்மோட்ரிச் (Bezalel Smotrich), இஸ்ரேல் ஹயோம் அவுட்லெட்டால், யாட் பின்யாமினில் நடத்தப்பட்ட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, “2005-ல் இஸ்ரேல் காஸாவிலிருந்து வெளியேறாமல் இருந்திருந்தால், அக்டோபர் 7 தாக்குதல் நடந்திருக்காது. தற்போதைய உலகளாவிய யதார்த்தத்தை வைத்துக்கொண்டு நாம்மால் ஒரு போரை நிர்வகிக்க முடியாது. காஸாவுக்கான மனிதாபிமான உதவிகள் இஸ்ரேலுக்கு ஆபத்தை விளைவிக்கும்.

எங்கள் பணயக்கைதிகள் திருப்பி அனுப்பப்படும் வரை, காஸாவில் இருக்கும் 2 மில்லியன் குடிமக்கள் பசியால் இறக்க நேரிட்டாலும் சரி, காஸா பகுதிக்கு மனிதாபிமான உதவியை தடுப்பது தார்மீக ரீதியாக நியாயமானதுதான். ஆனால், சர்வதேச சமூகம் அதை அனுமதிக்காது. அதனால்தான் நாம் காஸாவுக்கான உதவிகளை அனுமதிக்கிறோம். நாம் இன்று ஒரு குறிப்பிட்ட யதார்த்தத்தில் வாழ்கிறோம். எனவே இந்தப் போருக்கான சர்வதேச அங்கீகாரம் தேவை.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88