நெல்லை: ரூ.75 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல் – ஒட்டுமொத்த கும்பலை பிடிக்க காவல்துறை தீவிரம்

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே மூன்றடைப்பு காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நான்குவழிச் சாலையில் அதிக வேகத்துடன் வந்த காரை மறித்தநர். காரில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் சந்தேகமடைந்த போலீஸார் வாகனத்தை சோதனையிட்டனர். காருக்குள் கட்டுக்கட்டாக 500 ரூபாய் கள்ள நோட்டு தாள்கள் இருந்ததை கண்டுபிடித்தனர்.

காரில் இருந்த விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்த சீனிச்சாமி மற்றும் தென்காசி மாவட்டம் கோதை நாச்சியார்புரம் கிராமத்தைச் சேர்ந்த விஷ்ணு சங்கர், தங்கராஜ் ஆகிய மூவரையும் மூன்றடைப்பு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அவர்கள் எங்கிருந்து கள்ள நோட்டுகளை எடுத்துச் செல்கிறார்கள் என்பது குறித்து விசாரித்தனர்.

காரின் ஆவணங்களை சோதனையிட்டதில், பொய்யான பதிவு எண்ணுடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மூவரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடம் இருந்த காரை பறிமுதல் செய்தனர். அத்துடன், காரில் இருந்த 75 லட்சம் ரூபாய் கள்ளநோட்டுகள், 8 செல்போன்கள், அரிவாள், கத்தி மற்றும் 1,13,000 ரூபாய் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

பிடிபட்டவர்களிடம் அந்த கள்ள நோட்டுகள் எங்கிருந்து யாருக்கு கொடுப்பதற்காக கொண்டு செல்லப்பட்டது? இதன் பின்னணியில் இயங்கும் கும்பல் எது? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் பின்னணியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பெரிய கும்பல் இருப்பதால் அனைவரையும் கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88