“மக்களை வறுமையில் இருந்து மீட்டெடுத்த இந்தியா…” – ஐ.நா சபையில் சொல்ல என்ன காரணம்?

ரோமில் நடைபெற்ற ஐ.நா சபை பொதுக்கூட்டத்தில் UNGA அமைப்பின் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ், டிஜிட்டல் மயமாக்கல் மூலம் 800 மில்லியன் மக்களை ‘வறுமையிலிருந்து மீட்டெடுத்த இந்தியா’ என்று அடிகோடிட்டு பாராட்டு தெரிவித்து இருக்கிறார்.

ஐநா சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் ( FAO) 78-வது பொதுக்கூட்டத் தொடர் ரோமில் நடைபெற்றது. “ நடப்பு மற்றும் எதிர்கால சந்ததியினருக்கான பூஜ்ஜிய பசியை நோக்கிய முன்னேற்றத்தை துரிதப்படுத்துதல்” என்ற தலைப்பில் உரையாற்றினார் டென்னிஸ் பிரான்சிஸ்.

டென்னிஸ் பிரான்சிஸ்

தனது உரைக்குப் பின்னர் ஐ.நா தூதர்கள், அதிகாரிகள், கொள்கை வல்லுனர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், வங்கி அமைப்புடன் ஒருபோதும் தொடர்பு கொள்ளாத இந்திய கிராமப்புற விவசாயிகள் இப்போது அவர்களின் அனைத்து வணிகங்களையும், பரிவர்த்தனைகளையும் தானே மேற்கொள்கின்றனர். ஸ்மார்ட் போன்கள் மூலம் அவர்களின் பில்களை செலுத்துதல் மற்றும் ஆர்டர்களுக்கான கட்டணங்களை பெறுதல் என அனைத்தையும் இணைய வழியில் பரிவர்த்தனை செய்கின்றனர்.

2009-ம் ஆம் ஆண்டில் இந்தியாவில் 17% மக்களே வங்கி கணக்கு வைத்திருந்தனர், அதில் 15% பேர் மட்டுமே டிஜிட்டல் பேமண்ட்களை மேற்கொண்டனர். 25 பேரில் ஒருவர் மட்டுமே தனிப்பட்ட அடையாள ஆவணம் வைத்திருந்தனர். சுமார் 37% பேர் மொபைல் போன்களை வைத்திருந்தனர். ஆனால், இன்று அந்த எண்கள் அதிவேகமாக அதிகரித்து 93% -ஐ எட்டியுள்ளது.

ஐ.நா சபை

இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட நிதி உள்ளடக்கம் மற்றும் ஆதார் நடவடிக்கைகளின் வரிசையில் வழங்கப்பட்டது பயோமெட்ரிக் தரவு தளமாகும். இதன் மூலம் ஜன்தன் எனப்படும் சேமிப்பு வங்கு கணக்குகளின் எண்ணிக்கை அதிகரித்தது. ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் டிஜிட்டல் ஐடி ஆவணத்தையும், 80 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் வங்கி கணக்குகளையும் கொண்டுள்ளனர். 2022 -ஆம் ஆண்டு நிலவரப்படி 60 கோடி டிஜிட்டல் பரிவர்த்தனைகள் முடிக்கப்பட்டுள்ளன. இது இந்தியாவில் அதிக அளவிலான இணைய ஊடுருவல் இருப்பதையும், அனைவருடமும் செல்போன் இருப்பதையும் காட்டுகிறது. இதனால் தான் இந்தியாவில் 800 மில்லியன் மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர் என்பதை அடிகோடிட்டு காண்பித்துள்ளார் பிரான்சிஸ்.