விருதுநகர் வட்டம், கன்னிச்சேரி புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் ரூ.6.44 கோடி மதிப்பிலான புதிய மருத்துவ கட்டடங்களை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் தலைமையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் நேற்று (30.07.2024) பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளுக்கான மருந்துப்பெட்டகம், பிரசவித்த தாய்மார்களுக்கு தாய் மற்றும் சேயுடன் கூடிய புகைப்படத்துடன் தாய் சேய் நலப்பெட்டகம், பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்டவற்றை அமைச்சர்கள் வழங்கினர். தொடர்ந்து நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், “தமிழ்நாட்டில் உள்ள வருவாய் மாவட்டங்களில் விருதுநகரில் நடைபெற்றுக் செயல்படுத்தப்படும் மருத்துவ திட்டங்கள் போல் வேறு எந்த மாவட்டத்திலும் இல்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கு அதிக அளவில் திட்டங்கள் மாவட்டத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 2286 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், நாய்க்கடி, பாம்புக்கடிக்கான மருந்துகள் உள்ளன. இதயம் காப்போம் திட்டம் மூலம் மாரடைப்பு அறிகுறியுடன் வரும் நோயாளிகளுக்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கும் வகையில் 14 மாத்திரைகள் கொண்ட பெட்டகத்தை அனைத்து மருத்துவமனைகளிலும் வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலம் தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 9,166 நபர்களும், துணை சுகாதார நிலையத்தில் 570 நபர்களும் பயனடைந்துள்ளனர். இதுபோன்ற திட்டம் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை.
தி.மு.க.தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு விருதுநகர் மாவட்டத்தில், ரூ.5.25 கோடி மதிப்பில் 23 துணை சுகாதார நிலைய கட்டிடங்கள், ரூ.4.75 கோடி மதிப்பில் 13 ஆரம்ப சுகாதார நிலையங்களில் வட்டார பொது சுகாதார அலகு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டு பொது மக்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்த மாவட்டத்தில் மருத்துவ கட்டமைப்பு என்பது மிகப் பெரிய அளவில் உண்டாயிருக்கிறது. எனவே, பொதுமக்கள் ஒரு வளமான சமுதாயத்தை உருவாக்க, இந்த மருத்துவக் கட்டமைப்புகள் மூலம் வழங்கப்படும் சேவைகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என கூறினார்.
தொடர்ந்து, சாலை மார்க்கமாக சிவகங்கை மாவட்டத்திற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் காரில் செல்லும்போது, விருதுநகர் நெடுஞ்சாலையில் சாலை விபத்தில் சிக்கி தலையில் பலத்த காயம் அடைந்து கிடந்த இளைஞர் முனியப்பன்(வயது 34) என்பவரை பார்த்தவுடன் உடனடியாக தனது வாகனத்தை நிறுத்தி, 108 ஆம்புலன்ஸை வரவைத்து, விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முனியப்பனுக்கு சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்துஅனுப்பி வைத்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88