தைவானை சேர்ந்த `யூ’ (Yu)என்றப் பெண் தன் காதலன், நண்பர்களுடன் ஜூலை 15 அன்று காரில் சென்றிருக்கிறார். அப்போது கார் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியிருக்கிறது. இந்த விபத்தில், காரில் இருந்த நான்கு பேர் பலத்த காயமடைந்தனர். யூ-வின் காலிலும் காயம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் பலத்த காயமடைந்த மூவர் உயிர் பிழைத்த நிலையில், யூ-வின் காதலன் உயிரிழந்தார்.

இந்த விபத்து தொடர்பாக பேசிய யூ, “விபத்து நடந்த அந்த நிகழ்வு இன்னும் கண்ணுக்குள் இருக்கிறது. என் காதலன், அவனது சகோதரி, எங்கள் நண்பன் மூவரும் இடிபாடுகளில் சிக்கியிருப்பதைக் பார்த்தபோது மனம் உடைந்தேன்.

மணமகள்

என் காலில் காயங்கள் இருந்தபோதிலும், அவர்களை மீட்க முயற்சித்தேன். ஆனால் அது முடியவில்லை. இறுதியில் என் காதலனை இழந்துவிட்டேன். ஆனால், எங்கள் காதல் உண்மையானது. அதை கௌரவிக்க வேண்டும் என விரும்புகிறேன். என் காதலனுக்கு வயதான தாயார் மட்டும்தான் இருக்கிறார். எனவே, என் காதலனின் அம்மாவை கவனித்துக் கொள்ளவும், என் அடுத்தகட்ட வாழ்வை அவர்களுடன் வாழவும் விரும்புகிறேன். அதற்காக பேய் திருமண சடங்கை(Ghost Marriage) செய்துகொள்ள முடிவு செய்திருக்கிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

பேய் திருமணம்(Ghost Marriage):

பேய் திருமணம் என்பது சீனாவில் சுமார் 3,000 ஆண்டுகள் பழைமையான பாரம்பரிய முறை. திருமணம் செய்துகொள்ளாமல் இறந்தவர்கள், திருமணம் நிச்சயிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் மரணத்துக்குப் பிறகு தனக்காக யாரும் இல்லை என்ற வேதனையை அனுபவிப்பதாகவும், அதனால் இறந்தவரை நேசித்தவர், உறவினர்கள் முன்னிலையில் மானசீகமாக இறந்தவரை திருமணம் செய்துகொண்டு அவர்களுக்காக வாழ்வை அற்பணிக்கும் ஒரு சடங்கு நிகழ்த்தப்படுகிறது. மேலும், பேய் திருமண செய்துகொள்பவர் ஒரு குழந்தையை தத்தெடுத்துக் கொண்டு, மீதி வாழ்வை வாழ்வார்கள் எனக் கூறப்படுகிறது.

மணமகள்

எப்படி நடக்கும் இந்த திருமணம்:

இறந்தவர்களின் புகைப்படம், அவர்கள் அணிந்திருந்த உடைகள் மற்றும் பிற கலைப்பொருட்களை பிரதிநிதித்துவப்படுத்தி, இறந்தவரை திருமணம் செய்துகொள்பவர் திருமண உடையில் அலகரித்து திருமணம் போன்றே விமரிசையாக இந்த சடங்கு நிகழ்த்தப்படுகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.