விழுப்புரம் மாவட்டம், வழுதுரெட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவர் கடந்த 2022-ம் ஆண்டு அன்னதானம் வழங்குவதற்காக, விழுப்புரம் பேருந்து நிலையத்திற்கு எதிரிலுள்ள `பாலமுருகன்’ என்ற ஹோட்டலில் 25 பார்சல் சாப்பாடு எவ்வளவு என்று கேட்டிருக்கிறார். அதற்கு, ஒரு பார்சல் சாப்பாட்டின் விலை ரூ.80 என்றும், அதில் சாப்பாடு, சாம்பார், காரக்குழம்பு, ரசம், மோர், கூட்டு, பொறியல், அப்பளம், வாழை இலை போன்றவற்றுடன் 1 ரூபாய் ஊறுகாய் பொட்டலம் ஒன்று கொடுப்போம். 25 பார்சல் சாப்பாட்டுக்கு 25 உறுகாய் பொட்டலங்கள் தருவோம் என்றும் ஹோட்டல் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.
அதை ஏற்றுக்கொண்ட ஆரோக்கியசாமி, ரூ.2,000 கொடுத்து 25 சாப்பாடு பார்சல் வாங்கியிருக்கிறார். அப்போது சாப்பாடு வாங்கியதற்கான ரசீது கேட்டிருக்கிறார் ஆரோக்கியசாமி. ஆனால் ரசீது கொடுக்காத ஹோட்டல் நிர்வாகம், சிறிய பேப்பரில் தொகையை எழுதிக் கொடுத்திருக்கிறது. அப்போது அதனை வாங்கிச் சென்றுவிட்டார். அதன்பிறகு சாப்பாடு பார்சலில் ஊறுகாய் இல்லாததைப் பார்த்த அவர், திரும்ப ஹோட்டலுக்கு வந்து அதன் உரிமையாளரிடம் ஊறுகாய் இல்லாதது குறித்து கேட்டிருக்கிறார். அதையடுத்து ஊழியர்களை அழைத்து ஹோட்டல் உரிமையாளர் விசாரித்தபோதுதான், சாப்பாடு பார்சலில் ஊறுகாய் வைக்காதது தெரிய வந்தது.
தொடர்ந்து ஊறுகாய் இல்லாமல் சாப்பாடு கொடுத்துவிட்டேன். அதனால் அந்த ஊறுகாய்க்கான ரூ.25-ஐ திரும்பத் தருமாறு கேட்டிருக்கிறார் ஆரோக்கியசாமி. ஆனால் அதனை தருவதற்கு மறுத்திருக்கிறார் ஹோட்டல் உரிமையாளர். அதனால் மன உளைச்சலுக்கு ஆளான அரோக்கியசாமி, விழுப்புரம் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்து வந்த ஆணையம், நேற்று அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியது. அந்த தீர்ப்பில், `ஆரோக்கியசாமி வாங்கிய பார்சல் உணவில் ஊறுகாய் வைக்காதது சேவை குறைபாடு.
இதனால் ஆரோக்கியசாமிக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு ரூ.30,000-ம், வழக்கு செலவுக்காக ரூ.5,000-ம், 25 ஊறுகாய் பொட்டலங்களுக்காக ரூ.25-ம், சாப்பாடு பார்சலுக்கான உண்மையான ரசீதும் கொடுக்க வேண்டும். மேலும் இந்த தீர்ப்பு வழங்கிய 45 நாட்களுக்குள் ஹோட்டல் உரிமையாளர் இந்த அபராதத் தொகையை செலுத்த வேண்டும். தவறினால் மாதம் ஒன்றுக்கு 9% வட்டியுடன் அந்தத் தொகையை செலுத்த வேண்டும்’ என்று அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறது. இந்த வழக்கின் மனுதாரரான ஆரோக்கியசாமி, அனைத்து நுகர்வோர் பொதுமக்கள் சுற்றுச்சூழல் பொதுநல சங்கம் என்ற அமைப்பின் மாநில தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88