இன்று பட்ஜெட் தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்!
நடப்பு ஆண்டில், நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற காரணத்தால், இடைக்கால பட்ஜெட் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது தேர்தல் முடிவுகள் வெளியாகி, மோடி தலைமையில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைந்துள்ள நிலையில், 2024-25ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யப்படுகிறது.
மீண்டும் நிதி அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் நிர்மலா சீதாராமன், தாக்கல் செய்யும் 7-வது பட்ஜெட் இதுவாகும். இதுவரை 5 முழு பட்ஜெட்களையும், ஒரு இடைக்கால பட்ஜெட்டையும் அவர் தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் சாதனையை முறியடிக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். மொரார்ஜி தேசாய் தொடர்ச்சியாக 6 மத்திய பட்ஜெட்டுகளை தாக்கல் செய்திருந்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88