US Elections 2024: மீண்டும் ட்ரம்ப்பை எதிர்த்து களம் இறக்கப்படுகிறாரா ஹிலாரி கிளிண்டன்?!

நவம்பர் மாதம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலுக்கான பிரசாரத்தில் ஜோ பைடனுடனான விவாதத்தில் ட்ரம்ப் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றதும், ட்ரம்ப் மீது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூடும் ட்ரம்ப்புக்கு ஆதரவான மனநிலையை உருவாக்கியிருக்கிறது. அதே நேரம், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா உள்ளிட்ட ஜனநாயக கட்சியின் முக்கிய தலைவர்களே `ஜோ பைடனுக்கு பதிலாக வேறு ஒரு வேட்பாளரைக் களமிறக்க வேண்டும்.

டொனால்ட் ட்ரம்ப் – ஜோ பைடன்

இதே நிலை நீடித்தால் தேர்தலில் வெற்றிபெறுவது கடினம்’ எனக் கூறி வருகின்றனர். இதற்கிடையில், இந்திய வம்சாவளியான துணை அதிபர் கமலா ஹாரிஸ்க்கு ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராகப் போட்டியிடும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், ஜோ பைடனுக்கு பதிலாக ஹிலாரி கிளிண்டன் போட்டியிட வாய்ப்பிருப்பதாகத் தகவல் பரவி வருகிறது.

முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளரான ஹிலாரி கிளிண்டன், 2016-ம் ஆண்டு அதிபர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். இந்த நிலையில், மீண்டும் அவர் தேர்தலைச் சந்திக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. 2016 தேர்தலில் நியூயார்க்கில் குடியரசுக் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்ட துணைவேந்தரான மைக் பென்ஸ், 304 தேர்தல் வாக்குகளைப் பெற்று வென்றார். ஜனநாயகக் கட்சி வேட்பாளரான கிளிண்டன், 227 தேர்தல் வாக்குகளைப் பெற்றிருந்தார்.

ஹிலாரி!

அதே நேரம், முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புடன் (62,984,828 வாக்குகள் 46.1%) ஒப்பிடும்போது, ஹிலாரி கிளிண்டன் (65,853,514 அல்லது 48.2%) வாக்குகள் பெற்றபோதும், ட்ரம்ப் எலக்டோரல் காலேஜ் வாக்குகள் (அதாவது, வாக்காளர்கள் தேசிய அளவில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கமாட்டார்கள். மாகாண அளவில் போட்டியிடும் வேட்பாளர்களையே தேர்ந்தெடுப்பார்கள்.

இரண்டு மாகாணங்களில் மட்டுமே வெற்றி பெற்றவர் அனைத்து வாக்குகளையும் எடுத்துக்கொள்வார் என்ற விதியின் அடிப்படையில், அந்த மாகாணங்களில் எந்த வேட்பாளர் அதிக எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெறுகிறாரோ அவருக்கு அந்த மாகாணத்தின் அனைத்து எலக்டோரல் காலேஜ் வாக்குகளும் வழங்கப்படும். அதனால்தான் 2016-ல் ஹிலாரி கிளிண்டன் தேசிய அளவில் மக்களின் வாக்குகளை அதிகம் பெற்றாலும், எலக்டோரல் காலேஜ் வாக்குகளை) குறைவாகப் பெற்றதால் ட்ரம்ப்பிடம் தோல்வியைத் தழுவினார். இந்த நிலையில்தான் மீண்டும் ஹிலாரி கிளிண்டன் தேர்தலைச் சந்திக்க விருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.