ஆன்லைனில் வெளியான மார்பக அறுவை சிகிச்சை வீடியோ; மருத்துவமனை மீது வழக்கு தொடர்ந்த பெண்- நடந்தது என்ன?

சீனாவில், தன்னுடைய மார்பக அறுவை சிகிச்சை வீடியோ ஆன்லைனில் வெளியானதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெண், சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

இந்த சம்பவம் குறித்து வெளியான தகவலின்படி, கோவா (Goa) என்ற குடும்பப் பெயர் கொண்ட பெண், கடந்த ஜனவரியில் மத்திய சீனாவிலுள்ள ஒப்பனை சார்ந்த அறுவை சிகிச்சை மருத்துவமனையில் (cosmetic surgery hospital) மார்பக விரிவாக்க அறுவை சிகிச்சை மேற்கொண்டார். பின்னர், அடுத்த சில மாதங்களில் சீன சமூக வலைதளப் பக்கமான டூயினில் (Douyin), தன்னுடைய மார்பக அறுவை சிகிச்சை வீடியோ வந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

மருத்துவமனை

அதையடுத்து, தன்னுடைய தனியுரிமை மீறப்பட்டிருப்பதாக அந்த மருத்துவமனையைத் தொடர்புகொண்ட பெண், வீடியோ எடுத்த நபரைக் கண்டுபிடித்து அந்த வீடியோவை நீக்குமாறும், பகிரங்க மன்னிப்பு கேட்டு இழப்பீடு வழங்குமாறும் பலமுறை வலியுறுத்தியிருக்கிறார். ஆனால், இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாத மருத்துவமனை நிர்வாகம், `இந்த வீடியோ வேறு யாரோ ஒருவரால் எடுக்கப்பட்டு சமூக வலைதளத்தில் கசியவிடப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சிசிடிவி கண்காணிப்பு காட்சிகள் நீக்கப்படுகின்றன. எனவே, வீடியோவை யார் எடுத்தார் என்பது கண்டுபிடிப்பது சாத்தியமில்லாத ஒன்று . ஒருவேளை, அந்த வீடியோ மீண்டும் வெளிவந்தால் அதை நீக்க சம்பந்தப்பட்ட சமூக வலைத்தளத்தைத் தொடர்புகொள்ளலாம்’ என்று தெரிவித்திருக்கிறது.

மருத்துவமனையின் இத்தகைய அலட்சிய பதிலால் அதிருப்தியடைந்த பெண், `ஆபரேஷன் தியேட்டர் மிகவும் தனிப்பட்ட அமைப்பு. அந்த வீடியோவில் டாக்டர்கள், செவிலியர்கள் இருந்தனர். வெளியாட்கள் யாரும் உள்ளே நுழைந்து வீடியோ எடுக்க முடியாது” என்று கூறி அந்த நபர் யார் என்பதைக் கண்டுபிடிக்குமாறு மருத்துவமனையை மீண்டும் வலியுறுத்தினார். இதற்கும், வீடியோ எடுத்த நபர் மருத்துவமனையிலிருந்து வெளியேறிவிட்டதாகவும், அவர் தொடர்பான தகவல்கள் நீக்கப்பட்டுவிட்டதாகவும் மருத்துவமனை கூறியிருக்கிறது.

வீடியோ

இதனால் விரக்தியடைந்த அந்தப் பெண், அந்த மருத்துவமனை மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார். இன்னொருபக்கம், மருத்துவமனையின் இத்தகைய பதிலை இணையதளவாசிகள் பலரும் விமர்சித்து வருகின்றனர். அதில் ஒருவர், `வீடியோ எடுத்தவர் வேலையை விட்டுச் சென்றிருந்தால், எந்தவொரு நிறுவனமும் இதை ஒரு சாக்காகப் பயன்படுத்தி, தனிப்பட்ட ஊழியர்களே காரணம் விலகிவிடும் என்று தெரிவித்திருக்கிறார். அதேபோல் மற்றொரு இணையதளவாசி, `ஏதாவது தவறு நடந்தால், உடனே அவர் ஒரு தற்காலிக பணியாளர் அல்லது அவர் வெளிறிவிட்டார் என்று கூறி தங்களின் பொறுப்பை எப்போதும் தட்டிக் கழிக்கிறார்கள்’ என்று கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88