வாக்கிங் சென்ற நாம் தமிழர் கட்சி நிர்வாகி படுகொலை – மதுரையில் அதிர்ச்சி சம்பவம்

நாம் தமிழர் கட்சி நிர்வாகி இன்று காலை நடைபயிற்சியின்போது ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் நடந்த இடம்

மதுரை மாநகர் செல்லூர் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் நாம் தமிழர் கட்சியின் வடக்குதொகுதி துணைச்செயலாளராக இருந்து வருகிறார்.

இவர் இன்று காலை வல்லபாய் சாலை பகுதியில் பாலசுப்பிரமணியன் நடைபயிற்சி செய்துகொண்டிருந்தபோது அவரை ஒரு கும்பல் வழிமறித்து ஆயுதங்களால் வெட்டியது. இதிலிருந்து தப்பித்து அவர் ஓட முயற்சித்தபோதும் விரட்டிச்சென்று வெட்டி படுகொலை செய்துள்ளது.

பாலசுப்பிரமணியன்

இந்த சம்பவம் மதுரையில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த காலங்களில் சி.பி.எம் கவுன்சிலர் லீலாவதி, திமுக மூத்த தலைவர் தா.கிருஷ்ணன், மு.க.அழகிரியின் நண்பரான பொட்டு சுரேஷ் உள்ளிட்ட அரசியல் படுகொலை சம்பவங்களிலிருந்து மதுரை மக்கள் இப்போதுதான் கொஞ்ச நாளாக தான் மீண்டு வந்தார்கள்.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இக்கொலை சம்பவம் குறித்து மதுரை தல்லாகுளம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88