விக்கிரவாண்டி: `பாமக கனவை தகர்த்த அண்ணாமலை’ – அதிமுக வாக்குகளை திமுக தூக்கிய பின்னணி!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டித் தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இருந்த புகழேந்தி உயிரிழந்ததையடுத்து, ஜூலை 10-ம் தேதி அங்கு இடைத்தேர்தலை அறிவித்தது தேர்தல் ஆணையம். தி.மு.க சார்பில் அன்னியூர் சிவா, பா.ம.க சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட அபிநயா போன்றவர்கள் களமிறக்கப்பட்டனர்.

விக்கிரவாண்டியின் ஒன்பது ஒன்றியங்களுக்கு ஒன்பது அமைச்சர்களையும், தலா ஒரு எம்.பி எம்.எல்.ஏ-வை தேர்தல் பொறுப்பாளர்களாக அறிவித்த அறிவாலயம், அறிவிப்பு இல்லாமல் தன்னுடைய அனைத்து அமைச்சர்களையும், எம்.எல்.ஏ-க்களையும் களமிறக்கி விட்டது. அ.தி.மு.க மற்றும் தே.மு.தி.க இந்த இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்ததால், களத்தில் மும்முனைப் போட்டி ஏற்பட்டது. மேலும் அ.தி.மு.க மற்றும் தே.மு.தி.க-வின் வாக்குகள் வெற்றியை தீர்மானிக்கும் காரணியாக மாறியதால், தி.மு.க, பா.ம.க, நா.த.க உள்ளிட்ட மூன்று அணிகளும் அந்த வாக்குகளை குறிவைத்து பிரசாரத்தை மேற்கொண்டன.

விக்கிரவாண்டி – அன்னியூர் சிவா, அபிநயா, அன்புமணி

“கடந்த 2021 தேர்தலில் இங்கு போட்டியிட்டு வெற்றிபெற்ற தி.மு.க புகழேந்தி 93,730 வாக்குகளையும், தோல்வியடைந்த அ.தி.முக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் 84,157 வாக்குகளையும் பெற்றிருந்தார். அதாவது தி.மு.க 48.41% வாக்குகளையும், அ.தி.மு.க 43.47% சதவிகித வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி 9,573 வாக்குகளையும் பெற்றிருந்தன. `மேலோட்டமாக பார்த்தால் எங்களுக்கும் எதிரணிக்கும் வாக்கு வித்தியாசம் குறைவாக இருப்பதைப் போல தோன்றலாம். ஆனால் 2021 தேர்தலில் பா.ம.க அணியில் இருந்த அ.தி.மு.க தற்போது அவர்களுடன் இல்லை. அதேபோல 2016 தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு வாங்கிய 41,428 வாக்குகளைத்தான், தங்களின் வாக்கு வங்கியாக கூறி வருகிறார்கள் பா.ம.க-வினர். அதன்படி பார்த்தால் அதே அளவில்தான் அ.தி.மு.க-வின் வாக்கு வங்கியும் இருக்கும். அவர்களின் வாக்குகளை எப்படி `வாங்குவது’ என்பது எங்களுக்குத் தெரியும். அதேபோல வன்னியர் சமூக மக்களே பா.ம.க மீது கடும் அதிருப்தியில் இருப்பதால், அவர்கள் ஏற்கெனவே வாங்கிய வாக்குகளை தற்போது கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது” என்று கூறி, அ.தி.மு.க-வின் வாக்குகளுக்கு ஸ்கெட்ச் போட்டது தி.மு.க தரப்பு.

அண்ணாமலை

நாடாளுமன்றத் தேர்தலில் பல இடங்களில் டெபாசிட் இழக்க வைத்தார்கள். தமிழக வரலாற்றில் இவ்வளவு பெரிய ஒரு கட்சி, இத்தனை தொகுதிகளில் டெபாசிட் இழந்தது கிடையாது. அந்த கின்னஸ் சாதனை புரிந்த கட்சியாக அ.தி.மு.க இருக்கிறது. அதற்கு காரணம் அ.தி.மு.க கட்சி நன்றாக இருந்தாலும், அதனை வழிநடத்தக் கூடிய தலைவர்கள் சரியில்லை என்பதற்காகத்தான், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுக்கு மக்கள் தண்டனை கொடுத்திருக்கிறார்கள்’ என்று அ.தி.மு.க-வையும், எடப்பாடி பழனிசாமியையும் கடுமையாக விமர்சித்திருந்தார். அந்த கருத்து, அதுவரை பா.ம.கவுக்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்திருந்த அ.தி.மு.க வாக்காளர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. அதனால்தான் அந்த வாக்குகள் அப்படியே தி.மு.க பக்கம் திரும்பிவிட்டன” என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

வன்னியர் சமூகத்தை பெரும்பான்மையாக கொண்டிருக்கும் இந்த தொகுதியில், அதே சமூகத்தைச் சேர்ந்த, சித்த மருத்துவர் அபிநயாவை களமிறக்கினார் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான்.   தருமபுரி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, தோல்வியடைந்தவர்தான் இந்த அபிநயா. “ஜெயலலிதா தொடங்கி, விஜயகாந்த் வரைக்கும் நான் தேர்தலில் வேலை செய்திருக்கிறேன். கூட்டணியில் இல்லையென்றாலும் உங்களுக்கு ஆதரவாக நின்றிருக்கிறேன். நம்முடைய பொது எதிரி தி.மு.க-தான். அதனால் அ.தி.மு.க, தே.மு.தி.க உறவுகளே இந்த தேர்தலில் எங்களுக்கு ஆதரவு தாருங்கள்’ என்று மேடைதோறும் நட்புக் கரம் நீட்டினார் சீமான். `தே.மு.தி.க-வின் வாக்குகள் தி.மு.க-வுக்கோ, பா.ம.க-வுக்கோ போகாது. அது கண்டிப்பாக எங்களுக்குத்தான் வரும். அதேபோல அனைத்து தேர்தல்களிலும் அ.தி.மு.க-வில் வாக்களித்துப் பழகியவர்கள், இந்த முறை யாருக்கு வாக்களிப்பது என்று தங்கள் பிள்ளைகளிடம்தான் கேட்பார்கள். அந்த பிள்ளைகள், இளைஞர்களாக எங்களிடம்தான் இருக்கிறார்கள். அதனால் அ.தி.மு.க-வின் வாக்குகள் 100% எங்களுக்குத்தான்’ என்று கணக்கு போட்டனர் நாம் தமிழர் கட்சியினர்.

சீமான்

அதேபோல, `அ.தி.மு.க-வின் வாக்குகள் ஒருபோதும் தி.மு.க-வுக்குப் போகாது. ஏற்கெனவே கூட்டணியில் இருந்தவர்கள் என்கிற முறையில், அந்த வாக்குகள் அப்படியே எங்களுக்குத்தான் என்று அடித்துக் கூறினார்கள் பா.ம.கவினர். நாடாளுமன்றத் தேர்தலில் மாம்பழம் சின்னத்தை இழந்தவர்களுக்கு, இந்த தேர்தலில் இலையில்லாத மாம்பழம் சின்னமாக கிடைத்தது சற்று ஆறுதலாக இருந்தது. அதனால் அனைத்து விளம்பரங்களிலும் இலையுடன் கூடிய மாம்பழத்தை வரைந்து, அச்சிட்டு, `இலை’ தங்களுடன் இருப்பதாகவே காட்டிக் கொண்டது பா.ம.க. அத்துடன், `2016 தேர்தலில் நீங்கள் 41,428 வாக்குகளை வழங்கிய அன்புமணிதான் தற்போது மீண்டும் உங்களிடம் வந்திருக்கிறார். அ.தி.மு.க-வினருக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். நம்முடைய பொது எதிரி தி.மு.க-தான். அதனால் பா.ம.க-வுக்கு வாக்களியுங்கள். இந்த வேட்பாளர் அன்புமணிக்காக உங்கள் அன்புமணி வாக்கு கேட்டு வந்திருக்கிறேன்’ மேடைக்கு மேடை அ.தி.மு.க-வுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்தார் அன்புமணி ராமதாஸ். அந்த கோரிக்கை அ.தி.மு.க வாக்காளர்களின் கவனத்தை ஈர்த்தது. அதனால் இந்த தேர்தலில் நாம் வெல்லப்போவது உறுதி என்று நினைத்த பா.ம.க தரப்பு, பரவலாக பசையை இறக்கியது.

இந்த நிலையில், விக்கிரவாண்டி தேர்தல் பிரசாரத்துக்கு வந்த பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, `நம்பிக்கை துரோகி என்ற பெயர் ஒருவருக்கு பொருந்துமென்றால் அது எடப்பாடி பழனிசாமி அவர்களுக்குத்தான். பிரதமர் அவரை பக்கத்தில் அமர வைப்பார். ஆனால் சுயலாபத்துக்காக, இக்கரைக்கு அக்கரை பச்சை என்று பா.ஜ.கவை வேண்டாம் என்று ஒதுக்கியவர் இந்த எடப்பாடி பழனிசாமி. அதற்கு மக்கள் என்ன பாடம் கற்பித்தார்கள்?

அண்ணாமலை

நாடாளுமன்றத் தேர்தலில் பல இடங்களில் டெபாசிட் இழக்க வைத்தார்கள். தமிழக வரலாற்றில் இவ்வளவு பெரிய ஒரு கட்சி, இத்தனை தொகுதிகளில் டெபாசிட் இழந்தது கிடையாது. அந்த கின்னஸ் சாதனை புரிந்த கட்சியாக அ.தி.மு.க இருக்கிறது. அதற்கு காரணம் அ.தி.மு.க கட்சி நன்றாக இருந்தாலும், அதனை வழிநடத்தக் கூடிய தலைவர்கள் சரியில்லை என்பதற்காகத்தான், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுக்கு மக்கள் தண்டனை கொடுத்திருக்கிறார்கள்’ என்று அ.தி.மு.க-வையும், எடப்பாடி பழனிசாமியையும் கடுமையாக விமர்சித்திருந்தார்.

அந்த கருத்து, அதுவரை பா.ம.கவுக்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்திருந்த அ.தி.மு.க வாக்காளர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. அதனால்தான் அந்த வாக்குகள் அப்படியே தி.மு.க பக்கம் திரும்பிவிட்டன என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அதிகாரப்பூர்வ முடிவுகள்:

தி.மு.க வேட்பாளர் அன்னியூர் சிவா – 1,24,053

பா.ம.க வேட்பாளர் சி.அன்புமணி – 56,296

நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா – 10,602

67,757 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க முன்னிலை!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88