`மூளையைத் தின்னும் அமீபா; கேரளாவில் 3 சிறுவர்கள் பலி’ – முன்னெச்சரிக்கைக்கு வலியுறுத்தும் எடப்பாடி

கேரளா மாநிலத்தில் மூளையை தின்னும் அமீபா தொடர்பாக பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. மூளையை தின்னும் இந்த அமீபாவால் பாதிக்கப்பட்ட கோழிக்கோட்டை சேர்ந்த சிறுவன், கண்ணூரைச் சேர்ந்த தட்சிணா, மலப்புரத்தைச் சேர்ந்த ஃபட்டுவா ஆகிய சிறுவர்கள் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்திருக்கின்றனர். இந்த நோய் தொடர்பாக கேரள அரசு பல்வேறு எச்சரிக்கை நடவடிக்கைகளையும், வழிகாட்டுதல்களையும் வழங்கியிருக்கிறது.

அமீபா

இது தொடர்பாக வெளியான தகவலில், உயிரிழந்த சிறுவர்கள் அனைவருமே நீர் நிலைகளில் குளித்திருக்கின்றனர். அதன் பிறகு அவர்களுக்கு தலைவலி, வாந்தி ஏற்பட்டிருக்கிறது. உடனே அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டனர். ஆனாலும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்திருக்கின்றனர். இந்த வகை அமீபா வெப்பமான நன்னீர் ஏரிகள், குளங்கள் மற்றும் ஆறுகளில் வசிக்கக் கூடியவை என தெரிய வந்திருக்கிறது. மூக்கு வழியாக மூளைக்குச் சென்று மூளை திசுக்களை அழித்து வீக்கத்தை ஏற்படுத்தும்.

இந்த வகை அமீபாவால் பாதிப்பு ஏற்பட்ட நபருக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டு மரணம் நிகழும் எனக் கூறப்படுகிறது. அரிதாக குடிநீரில் கூட இந்த வகை அமீபா உருவாகும் என கூறப்படுகிறது. இந்த செய்திகள் கேரள மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி,“கேரளா மாநிலத்தில் அமீபா நுண்ணுயிர் பரவலால் மூளையில் பாதிப்பு ஏற்பட்டு மூவர் உயிரிழந்துள்ளதாக வரும் செய்திகள் கவலையளிக்கின்றன. உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.

ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி

கேரளாவில் இந்த நுண்ணுயிர் பரவி வரும் நிலையில், தமிழ்நாட்டில் இத்தகு பரவல்கள் ஏற்படாவண்ணம் முன்னெச்சரிக்கையுடன் அரசு செயல்பட வேண்டும். அசுத்தமான நீரின் வாயிலாகவே பரவும் இந்த நுண்ணுயிர், குழந்தைகளை தொற்றும் ஆபத்து அதிகம் உள்ளதால், மக்களின் உயிர்களைக் காக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அதிக கவனத்தை செலுத்துமாறு இந்த விடியா திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்,“மனித மூளையை உண்ணும் அமீபா குறித்த பதற்றம் தேவையில்ல. தற்போது தேவையான சுகாதார நடவடிக்கைகள், எடுக்கப்பட்டிருக்கிறது” எனத் தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88