உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட் – கோவை மேயர் தேர்வு குறித்து திமுக தலைமை ஆலோசனை!

கோவை மாநகராட்சி மேயராக இருந்த கல்பனா ஆனந்தக்குமார் மீது பல்வேறு புகார்கள் எழுந்தன. இதனால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் ராஜினாமா தகவல் அதிகாரபூர்வமாக வெளியில் வருவதற்கு முன்பே மேயர் பதவிக்கான ரேஸ் தொடங்கிவிட்டது.

கல்பனா

மேயர் பதவியை எதிர்பார்த்து, மண்டலத் தலைவர்களும், ஏராளமான கவுன்சிலர்களும் சென்னையில் முகாமிட்டுள்ளனர். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிந்தவுடன் கோவை மேயர் தேர்வு இறுதி செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து திமுக வட்டாரங்களில் விசாரித்தபோது, “2022 உள்ளாட்சித் தேர்தல் முடிந்தபோது கோவை மேயர் பதவிக்கு சீனியர்கள் முட்டி மோதினார்கள். அப்போது தீவிரமாக முயற்சித்தவர்களுக்கு மண்டலத் தலைவர், நிலைக்குழு தலைவர் பதவிகள் வழங்கப்பட்டன.

கோவை மாநகராட்சி

இந்நிலையில் தற்போது மேற்கு மண்டலத் தலைவர் தெய்வானை, கிழக்கு மண்டலத் தலைவர் இளஞ்செல்வி, மத்திய மண்டலத் தலைவர் மீனா, நிலைக்குழு தலைவர்கள் மாலதி, சாந்தி ஆகியோர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுதவிர கவுன்சிலர்கள் அம்பிகா, பூங்கொடி, ரங்கநாயகி ஆகியோரும் ரேஸில் முன்னணியில் உள்ளனர். கல்பனா கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் மீண்டும் கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு மேயர் பதவி கொடுக்க வாய்ப்புள்ளது, அதேநேரத்தில் கோவை திமுகவில் தொடர்ந்து கவுண்டர் மற்றும் நாயுடு சமுதாயத்தினருக்கே வாய்ப்பு வழங்கப்படுகிறது.

தெய்வானை
அம்பிகா
ரங்கநாயகி

உண்மையில் அந்த இரண்டு சமுதாயங்களும் அதிமுக, பாஜகவுக்குதான் ஆதரவு வழங்குகின்றன. எனவே  சமூகநீதி  பேசும் திமுக, இந்தமுறை மாற்று சமுதாயத்தினருக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என தலைமைக்கு கோரிக்கை வைத்துள்ளோம்.” என்றனர்.

உளவுத்துறை ரிப்போர்ட்டும் அதையே பிரதிபலிக்கிறது. “தற்போது கோவையில் வெற்றி பெற்ற எம்.பி கணபதி ராஜ்குமார் கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். கோவை மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திக், துணைமேயர் வெற்றிசெல்வன் நாயுடு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். அதனால் அந்த 2 சமுதாயங்களை தவிர்த்து மாற்று சமுதாயத்தில் இருந்து ஒருவரை மேயராக்கினால் 2026 தேர்தல் களத்துக்கும் உதவும்.” என உளவுத்துறை ரிப்போர்ட் வழங்கியுள்ளது.

உதயநிதி

“மேயர் பதவி குறித்து அமைச்சர் உதயநிதி தான் இறுதி முடிவு எடுக்கப் போகிறார். அவர் 2024 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள், 2026 சட்டமன்ற தேர்தல் ஆகியவற்றை மனதில் வைத்துதான் முடிவு செய்வார்.” என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88