நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான அன்றே (ஜூன் 4) மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியானது. அதில், வினாத்தாள் கசிவு, மதிப்பெண் வழங்கியதில் முறைகேடு போன்றவை நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதன்பின்னர், நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமையில் முன்னேற்றம் தேவை மத்திய கல்வியமைச்சர் கூறியது, அதன் இயக்குநர் நீக்கப்பட்டது, கடைசி நேரத்தில் மருத்துவ முதுநிலை படிப்புகளுக்கான நீட் ஒத்திவைக்கப்பட்டது, நீட் மோசடியில் பீகாரில் ஈடுபட்டதாக இருவரை சிபிஐ கைதுசெய்திருப்பது, தொடர்ந்து மாணவர்கள் போராட்டம் நடத்திவருவது என நீட் இன்னும் தேவையா என தேசிய அளவில் பெரும் பிரச்னையாக வெடித்துக்கொண்டிருக்கிறது.
நீட் மோசடி தொடர்பாகத் தனி விவாதம் நடத்தவேண்டும் என நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிக்கட்சிகளும் கோரிக்கை விடுத்துவருகின்றன. இந்த நிலையில், மக்களவை சபாநாயகராக இரண்டாவது முறையாகாது தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஓம் பிர்லாவின் மகள் அஞ்சலி பிர்லா உண்மையிலே தகுதியின் அடியில்தான் முதல் முயற்சியிலேயே யூ.பி.எஸ்.சி (UPSC) தேர்வில் தேர்ச்சி பெற்றாரா என சமூக வலைதளங்களில் மீண்டும் விவாதம் கிளம்பியிருக்கிறது.
முன்னதாக, 2019-க்கு முன்னர் ஒரு மாடலிங் துறையில் இயங்கிக்கொண்டிருந்த அஞ்சலி பிர்லா, 2019-ல் முதல்முறையாக UPSC யூ.பி.எஸ்.சி தேர்வில் பங்கேற்று முதல் முயற்சியிலேயே ஐ.ஏ.எஸ் அதிகாரியாக தேர்ச்சி பெற்றார். டெல்லி பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் ராம்ஜாஸ் கல்லூரியில் பொலிட்டிகள் சயின்ஸ் படித்திருக்கும் இவர், தற்போது ரயில்வே துறையில் பணியாற்றி வருகிறார்.
முன்னரே அவர் முறைகேடு செய்து தேர்வில் வெற்றதாக வெளியான, தன் மீதான ட்ரோல்களுக்கு பதிலளித்த அஞ்சலி பிர்லா, “யூ.பி.எஸ்.சி தேர்வு மிகவும் நியாயமாக நடத்தப்படக்கூடியது. இதில் பின்வாசல் வழியாக தேர்ச்சிபெற முடியாது. குறைந்தபட்சமாகவாவது இதனை மதியுங்கள்” என்றும், நாட்டு மக்கள் மீது என் தந்தை கொண்டிருக்கும் அர்ப்பணிப்பை எப்போதும் பார்த்துவந்ததால், இந்த சமுதாயத்துக்கு ஏதாவது செய்ய சிவில் சேவையில் சேர விரும்பினேன்” என்றும் தெரிவித்திருந்தார்.
இப்படியிருக்க, நீட் விவகாரம் வெடித்துக்கொண்டிருக்கும் வேளையில் மீண்டும் சமூக வலைதளங்களில் அஞ்சலி பிர்லா தேர்ச்சி குறித்த விவாதம் தொடங்கியிருக்கிறது. அதில், X சமூக வலைதளப் பயனர் ஒருவர், “நம்பர் ஒன் சர்வாதிகாரி சபாநாயகர் ஓம் பிர்லாவின், மாடலிங் மகள், திடீரென்று ஐ.ஏ.எஸ் தேர்வில் பங்கேற்று முதல் முயற்சியிலேயே ஐ.ஏ.எஸ் ஆனார். நீட் தேர்வை நடத்தும் ஏஜென்சி போல யூ.பி.எஸ்.சி-யும் ஊழல் செய்திருக்கிறதா… இதையும் விசாரிக்க வேண்டுமா?” என்று பதிவிட்டிருக்கிறார்.
மேலும், மற்றொரு நபர், “மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவின் மகள் அஞ்சலி பிர்லா, யூ.பி.எஸ்.சி தேர்வில் பங்கேற்று முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்றார். யூ.பி.எஸ்.சி நீட் வழியில் செல்கிறதா?” எனப் பதிவிட்டிருக்கிறார். இவ்வாறு, சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியாகக் கேள்வியெழுப்பிவருகின்றனர். முன்னரே இதற்கு அஞ்சலி பதிலளித்துவிட்ட நிலையில், நீட் தேர்வு மோசடி விவகாரத்தின் நீட்சியாக தற்போது மீண்டும் அஞ்சலி பிர்க்லா குறித்து சமூக வலைதளங்களின் பேசப்பட்டு வருகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88