ஒவைசி பதவியேற்பின்போது `ஜெய் ஸ்ரீராம்’ என்ற பாஜக MP-க்கள்… ஒவைசியின் பதிலும் விவாதமும்!

18-வது மக்களவையின் முதல் நாடாளுமன்ற கூட்டம் நேற்று தொடங்கிய நிலையில், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் எம்.பி-க்களாக வெற்றிபெற்றவர்கள் இன்று நாடாளுமன்றத்தில் பதவியேற்றுக்கொண்டனர். இந்த நிலையில், ஹைதராபாத் தொகுதியில் வெற்றிபெற்ற AIMIM தலைவர் அசாதுதீன் ஒவைசி பதவியேற்கும்போது அவையிலிருந்த பா.ஜ.க எம்.பி-க்கள் ஜெய் ஸ்ரீராம் என கூச்சலிட்டதும், அதற்கு அவர் செய்த எதிர்வினையும் தற்போது விவாத பொருளாகியிருக்கிறது.

முன்னதாக, மற்ற எம்.பி-க்களைப் போலவே முறைப்படி ஒவைசியும் சபாநாயகர் முன்னிலையில் பதவியேற்க அழைக்கப்பட்டார். அப்போது, ஒவைசி மேடைக்கு நடந்துசெல்லும்போது அவையிலிருந்த பா.ஜ.க எம்.பி-க்கள் சிலர், `பாரத் மாதா கி ஜே’, `ஜெய் ஸ்ரீராம்’ என்று சத்தம் போட்டனர்.

அதையடுத்து, சபாநாயகர் முன்னிலையில் உருது மொழியில் எம்.பி-யாக பதவியேற்றுக்கொண்ட ஒவைசி, `ஜெய் பீம், ஜெய் மீம், ஜெய் தெலங்கானா, ஜெய் பாலஸ்தீன், தக்பீர் அல்லாஹு அக்பர்’ என்று கூறிவிட்டு கீழிறங்கினார். பின்னர், ஒவைசியின் இத்தகைய உரைக்கு எதிர்ப்பு தெரிவித்த மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, “இது அவையின் விதிகளுக்கு எதிரானது. இந்தியாவில் வாழும் அவர் ‘பாரத் மாதா கி ஜெய்’ என்று கூறாதபோதே, அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமான வேலைகளை அவர் செய்கிறார் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என்று தனியார் ஊடகத்திடம் கூறினார்.

ஒவைசி

இருப்பினும், தான் அவ்வாறு பேசியது குறித்து விளக்கமளித்த ஒவைசி, “மற்ற எம்.பி-க்களும் பல்வேறு விஷயங்களைச் சொல்கிறார்கள். நான், ஜெய் பீம், ஜெய் மீம், ஜெய் தெலங்கானா, ஜெய் பாலஸ்தீன் என்றுதான் கூறினேன். இது எப்படி தவறாகும்… இதில் அரசியலமைப்பு விதியை எங்கு மீறினேன். பாலஸ்தீனம் பற்றி மகாத்மா காந்தி கூறியதையும் படியுங்கள்” என்று கூறினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88