NEET Issue: `மோடியின் திறமையற்ற அரசு மாணவர்களின் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது’ – ராகுல்

மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான நீட் (NEET – UG) நுழைவுத் தேர்வு முடிவுகள் ஜூன் 4-ம் தேதி வெளியான அடுத்த சில மணிநேரங்களில், வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண்கள் வழங்கியதில் மோசடி என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது. பின்னர், இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1,500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்த உத்தரவிட்டது.

Neet Exam

இதற்கிடையில், நீட் முறைகேடு தொடர்பாக பீகாரில் கைதுசெய்யப்பட்ட நான்கு பேர், தேர்வுக்கு முந்தைய நாள் இரவு தங்களுக்கு வினாத்தாள் கிடைத்ததாக வாக்குமூலம் அளித்தனர். இதுவொருபுறமிருக்க, ஜூன் 18-ம் தேதி நடத்தப்பட்ட யு.ஜி.சி நெட் (UGC NET) தேர்வும் ரத்து செய்யப்பட்டது. இன்னொருபக்கம், மத்திய அரசு நேற்று, தேசிய தேர்வு முகமையின் இயக்குநரை நீக்கி, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.

இப்படியிருக்க, மருத்துவ முதுநிலை படிப்புகளுக்கு இன்று நடைபெறவிருந்த நீட் (NEET – PG) தேர்வும் கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், மோடியின் திறமையற்ற அரசு மாணவர்களின் எதிர்காலத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி சாடியிருக்கிறார்.

ராகுல் காந்தி

இது குறித்து ராகுல் காந்தி தனது X சமூக வலைதளப் பக்கத்தில், “இப்போது நீட் முதுநிலைத் தேர்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது, மோடியின் ஆட்சியில் சீரழிந்த கல்விமுறைக்கு மற்றுமொரு துரதிஷ்டவசமான உதாரணம். பா.ஜ.க ஆட்சியில், மாணவர்கள், ‘படிக்க’ கட்டாயப்படுத்தப்படாமல், தங்களது எதிர்காலத்தைக் காப்பாற்ற, அரசுடன் ‘போராட’ வேண்டி கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.

மோடி

ஒவ்வொரு முறையும் இந்த சம்பவங்களை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்கும் மோடி, வினாத்தாள் கசிவு மோசடி மற்றும் கல்வி மாஃபியாவின் முன் முற்றிலும் செயலற்றவராக இருக்கிறார் என்பது இப்போது புரிகிறது. நரேந்திர மோடியின் திறமையற்ற அரசு மாணவர்களின் எதிர்காலத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. அதிலிருந்து நாட்டின் எதிர்காலத்தைக் காப்பாற்ற வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb