அரசியல் எனக்கு ஒத்துவராது. எனவே நான் அரசியலுக்கு வரப்ப்போவதில்லை என்று சில ஆண்டுகளுக்குமுன் ரஜினி சொன்னது ஒரு வகை என்றால், ‘‘நான் அரசியலுக்கு வருவதை என் மனைவி ஒப்புக்கொள்ளவில்லை’’ என்ன்று சொல்லியிர்ருக்கிறார் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ரகுராம் ராஜன்.
யார் இந்த ரகுராம் ராஜன்…?
ரகுராம் ராஜன் பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. உலகளவில் முக்கியமான பொருளாதார நிபுணர். 2008-ல் அமெரிக்கப் பொருளாதாரம் பெரிய அளவில் வீழ்ச்சியை சந்திக்கப் போகிறது என்பதை முன்கூட்டியே கணித்துச் சொன்னவர். மன்மோகன் பிரதமராக இருந்தபோது இந்திய அரசின் பொருளாதார ஆலோசகராக இருந்தவர். பிற்பாடு ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்தார்.
இன்னொரு பொருளாதார வீழ்ச்சி வராமல் தடுக்க வேண்டும் எனில், வங்கிகளின் பேலன்ஸ்ஷீட்டை சுத்தப்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து பேசி வந்தவர். இதற்காக ‘பேட் பேங்க்’ (Bad Bank) என தனியாக ஒரு வங்கியைத் தொடங்க வேண்டும் என்று சொல்லி வந்தார். இன்றைக்கு வங்கித் துறை லாபகரமாக செயல்பட்டு வருகிறது எனில், ரகுராம் ராஜன் அப்போது எடுத்து சில நடவடிக்கைகள்தான் முக்கியமான காரணம் என்கிறார்கள் வங்கித் துறை நிபுணர்கள்.
பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு எதிர்ப்பு!
2014-ஆம் ஆண்டு ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்தபோது, பா.ஜ.க ஆட்சிக்கு வந்து நரேந்திர மோடி பிரதமர் ஆனார். 2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி அன்று பணமதிப்பு நீக்க நடவடிக்கையை அறிவித்தார் பிரதமர் மோடி. இந்த நடவடிக்கையை அறிவிப்பதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே அது பற்றி ரிசர்வ் வங்கிக்கும் பிரதமர் அலுவலகத்துக்கும் பேச்சுவார்த்தை நடந்துவந்தது.
பணமதிப்பு நீக்க நடவடிக்கை எடுப்பது சரியல்ல; அப்படி எடுத்தால், சாதாரண மக்கள் மிகவும் கஷ்டப்படுவார்கள் என்பதே ரகுராஜனின் வாதமாக இருந்தது. ஆனால், பணமதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டே ஆகவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது மோடி அரசாங்கம்.
ரகுராம் ராஜனுக்காக குரல் தந்த மோடி!
இந்த நிலையில், ரகுராம் ராஜனின் செயல்பாடுகள் பா.ஜ.க.வினர் பலரும் வெளிப்படையாக விமர்சனம் செய்ய ஆரம்பித்தனர். ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உள்பட ரகுராம் ராஜனை விமர்சித்துப் பேச, அந்த விமர்சனங்களுக்கு ஈடுகட்டுகிற மாதிரி பிரதமர் மோடியே குரல் கொடுத்தார். ‘‘ரகுராம் ராஜன் நம் நாட்டுக்கு ஆற்றிய பங்களிப்பு பற்றி யாரும் குறை சொல்ல முடியாது’’ என்றார். என்றாலும், தனது பதவிக் காலம் முடிந்தவுடன் மீண்டும் அமெரிக்காவில் ஆசிரியப் பணியைத் தேடிப் போய்விட்டார்!
ராகுலுக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய ரகுராம் ராஜன்!
ரகுராம் ராஜனைப் பொருத்தவரை, தன்னை ஒரு ஜனநாயகவாதி என்று சொல்லிக் கொள்பவர். மதத்தின் பெயரில் அரசியல் செய்வது அவருக்கு ஏற்பில்லை. எனவே, காங்கிரஸ் கட்சியின் எழுச்சிக்கு ஆதாரவாக ராகுல் காந்தி இந்தியா முழுக்க நடைப்பயணம் மேற்கொண்டிருந்தபோது, ராகுலை சந்தித்து பரபரப்பை ஏற்படுத்தினார் ரகுராம் ராஜன். அதன்பிறகு பலமுறை ராகுலை சந்தித்து, பல விதமான ஆலோசகளை வழங்கினார்.
பா.ஜ.க.வுக்கு எதிர்ப்பாக செயல்படுபவர்களுடன் கைகோர்க்கத் தொடங்கினார் ரகுராம் ராஜன். 2021-ஆம் ஆண்டில் தமிழகத்தில் தி.மு.க ஆட்சி அமைந்தபின் ரகுராம் ராஜன் உள்பட உலகின் முக்கியமான பொருளாதார நிபுணர்கள் ஆலோசகர்களாக நியமிக்கப்பட, இதனை ரகுராம் ராஜன் ஏற்றுக்கொண்ட்டார்.
ஏன் அரசியலுக்கு வரவில்லை…?
இப்படி பா.ஜ.க.வுக்கு எதிரான அரசியலில் பின்னணியில் இருந்து செயல்படும் ரகுராஜன் ராஜன், ஏன் அரசியலுக்கு வரவில்லை என்பது முக்கியமான கேள்வி. இந்தக் கேள்விக்கு சமீபத்தில் பதில் சொல்லி இருக்கிறார் ரகுராம் ராஜன். ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தான் ஏன் அரசியலுக்கு வரவில்லை என்பது பற்றி சொல்லி இருக்கிறார்.
அது பற்றி அவர் சொன்னதாவது: ‘‘அடிப்படையில் நான் கல்வித் துறை சார்ந்த ‘அகடமிக்’ எனத் திரும்பத் திரும்ப சொன்னாலும், பலரும் அதை நம்ப மறுக்கிறார்கள். என் வேலை குழந்தைகளைக் கொஞ்சி, பெயர் வைப்பதல்ல. எனக்கென்று ஒரு குடும்பம் இருக்கிறது; குழந்தைகள் இருக்கிறார்கள். என் நல்லதுக்காக நான் அரசியலுக்கு வரவேண்டாம் என அவர்கள் நினைக்கிறார்கள். நான் அரசியலில் வெளிப்படையாக செயல்படுவதைவிட, யாருக்கு உதவி தேவைப்படுகிறதோ, அவர்களுக்கு ஆலோசனை சொல்வதே என அவர்கள் நினைக்கிறார்கள்’’ என்று சொல்லி இருக்கிறார்.
இப்போது நேரடியாக அரசியலுக்கு வராமல் இருக்கும் ரகுராம் ராஜன், இனிவரும் காலத்திலாவது வருவாரா அல்லது பின்னால் இருந்தே ஆலோசனை செல்லும் ராஜகுருவாக இருப்பாரா என்பது போகப் போகத் தெரியும்..!