மும்பை அந்தேரி கிழக்கு சுபாஷ் நகரில் வசிப்பவர் நிதின். இவருக்கு 4 குழந்தைகள் இருக்கின்றன. அவர்கள் 8 வயது முதல் 18 வயது வரை உள்ளவர்கள் ஆவர். கடந்த 2022ம் ஆண்டு நிதின் மனைவி திடீரென நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார். இதனால் குழந்தைகளை கவனிக்க நிதின் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். கடந்த சில நாள்களுக்கு முன்பு திடீரென வீட்டில் இருந்த நான்கு குழந்தைகளும், இரண்டாவது மனைவியும் காணாமல் போய்விட்டார். உடனே நிதின் தனது முதல் மனைவியின் சகோதரரை தொடர்பு கொண்டு தனது மனைவியும் குழந்தைகளும் வந்தார்களா என்று விசாரித்தார். ஆனால் அவர்கள் அங்கு செல்லவில்லை. காணாமல் போன, அடுத்த நாள் இரவு 10 மணிக்கு நிதின் மனைவி வீடு திரும்பினார். ஆனால் அவருடன் குழந்தைகள் வரவில்லை. குழந்தைகள் குறித்து கேட்டதற்கு, பஞ்சாப் எக்ஸ்பிரஸ் மூலம் டெல்லி சென்றதாகவும், கந்த்வா ரயில் நிலையத்தில் தண்ணீர் பிடிக்க சென்ற போது ரயில் கிளம்பி சென்றுவிட்டதாகவும் குறிப்பிட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த நிதின், இது குறித்து போலீஸில் புகார் செய்தார். போலீஸாரை அழைத்துக்கொண்டு நிதின் தனது குழந்தைகளை தேடி சென்றுள்ளார். நிதினின் இரண்டாவது மனைவிக்கு டெல்லியில் உறவினர்கள் யாரும் கிடையாது. அப்படி இருக்கும்போது குழந்தைகளை அழைத்துக்கொண்டு டெல்லி செல்லவேண்டிய அவசியம் என்ன என்று போலீஸாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
இதையடுத்து இப்பிரச்னையில் அப்பெண்ணிடம் விசாரணை நடத்த போலீஸார் திட்டமிட்டுள்ளனர். குழந்தைகள் காணாமல் போய் ஒரு வாரம் ஆகிவிட்டது. திட்டமிட்டு நிதின் மனைவி குழந்தைகளை ரயிலில் விட்டுவிட்டு வந்தாரா அல்லது யாரிடமாவது விற்றுவிட்டு வந்துவிட்டாரா அல்லது குழந்தைகள் கடத்தப்பட்டனரா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88