உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் சி.இ.ஓ-க்களில் கூகுளின் சுந்தர் பிச்சை முதலிடத்தில் உள்ளார். கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் சி.இ.ஓ-ஆகவும் இவர் இருக்கிறார். சுந்தர் பிச்சையின் தற்போதைய வருடாந்திர சம்பளம் 1,800 கோடி ரூபாய். 

2022-ம் ஆண்டு இவருக்கு ஊதியமாக 1,869 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இது இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் சம்பளத்தை விட அதிகம் என்று கூறுகின்றனர்.

salary

பில்லியனராகும் சுந்தர் பிச்சை…

15 வருடமாகக் கூகுள் நிறுவனத்தை வழிநடத்தி வரும் சுந்தர் பிச்சை, கூடிய விரைவில் பில்லியனராக உருவெக்க இருக்கிறார் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. சுந்தர் பிச்சை கூகுளில் இணைந்ததிலிருந்து, நிறுவனத்தின் பங்குகள் 400 சதவிகிதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளன. அதிலும் ஏஐ பயன்பாடுகளின் ஏற்றதினால்  கூகுள் நிறுவனம் ஒவ்வொரு நாளும் புதிய உயரங்களை அடைந்து வருகிறது.

இவரின் நிகர சொத்து மதிப்பு சுமார் 1 பில்லியன் டாலர்களாக  (இந்திய மதிப்பில் 8342 கோடி) உள்ளது. உலகிலேயே நிறுவனர் அல்லாத பில்லியனர் தொழில்நுட்ப சி.இ.ஓ-க்கள் வெகு சிலரே இருக்கின்றனர் என்பதால் இவரின் சாதனை மிகவும் அரிதானது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.