முன்னணி சட்ட நிறுவனத்தின் வழக்கறிஞர் ஒருவர் கணினியில் தவறாக ஒரு க்ளிக் செய்ததால், தவறுதலாக ஒரு தம்பதிக்கு விவாகரத்து வழங்கப்பட்டுள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது.

சில நாடுகளில் விவாகரத்து வழக்குகளுக்கு ஆன்லைன் மூலமாகவே விசாரித்து தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. லண்டனை சேர்ந்த திரு மற்றும் திருமதி வில்லியம்ஸ் என்ற தம்பதி 21 ஆண்டு மண வாழ்க்கைக்குப் பிறகு விவாகரத்து பெற விண்ணப்பித்திருந்தனர்.

தீர்ப்பு

இருவருக்கும் நிதி தொடர்பான விவகாரங்கள் இழுபறியில் இருந்ததால் வழக்கு தொடர்ந்து வந்தது. மற்றொருபுறம் வேறொரு தம்பதியும் விவாரத்துக்காக விண்ணப்பித்திருந்தனர். அவர்களது விவாகரத்துக்காக ஆன்லைன் போர்ட்டலில் விண்ணப்பிக்க வேண்டியிருந்தது. இந்நிலையில் வழக்கறிஞர்கள் குழுமத்தில் உள்ள ஒரு வழக்கறிஞர் இந்த தம்பதிக்கு விண்ணப்பிப்பதற்கு பதிலாக ஆன்லைனில் வில்லியம்ஸ் தம்பதியின் கணக்கை க்ளிக் செய்ததால் அது நீதிமன்ற விசாரணைக்குச் சென்றுவிட்டது.

நீதிமன்றம் வழக்கை விசாரித்து 21 நிமிடங்களில் தவறுதலாக விவாகரத்து உத்தரவை வழங்கிவிட்டது. இதுகுறித்து, குடும்ப நலப் பிரிவு நீதிபதியான சர் ஆண்ட்ரூ மெக்ஃபார்லேன் கூறுகையில், ” வழக்கறிஞர்கள் விவாகரத்துக்கு விண்ணப்பிக்க வேண்டிய வழக்கு கோப்பை திறப்பதற்கு பதிலாக வில்லியம் தம்பதியின் கோப்பைத் திறந்து, அந்த வழக்கில் இறுதி உத்தரவுக்கு விண்ணப்பித்துள்ளனர். அவர்கள் விண்ணப்பித்த வழக்குக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

Divorce

தாங்கள் செய்த தவற்றை இரண்டு நாள்களுக்குப் பிறகு கண்டறிந்த வழக்கறிஞர்கள், வில்லியம்ஸ் தம்பதி வழக்கில் வழங்கப்பட்ட இறுதி விவாகரத்து உத்தரவை ரத்துசெய்யக் கோரி, அங்குள்ள உயர்நீதிமன்றத்தை அணுகினர். அப்போது, வழக்கறிஞர் தவறான பட்டனை க்ளிக் செய்ததால், வேறு வழக்குக்கு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. எனவே, இந் உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என வாதிட்டனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி, “இந்த இறுதி விவாகரத்து உத்தரவில் மாற்றம் செய்வது மக்களுக்கு நீதியின் மேல் உள்ள நம்பகத்தன்மை மற்றும் உறுதித்தன்மையைக் குறைத்துவிடும். ஆன்லைன் விவாகரத்து விவகாரங்களில் தவறான பட்டனை க்ளிக் செய்வதன் மூலம் விரும்பத்தகாத விவாகரத்து கிடைக்க வாய்ப்புள்ளது என்ற என்ற எண்ணத்தையும் உடனடியாக சரி செய்வது அவசியம் என்று கூறி, வழக்கை ரத்துசெய்து உத்தரவிட்டார்.

தீர்ப்பு – மாதிரி படம்

விவாகரத்து வாங்கிக் கொடுக்க அதிக ஊதியம் பெறும் வழக்கறிஞரான வர்டாக் இதுகுறித்து தெரிவிக்கையில், “நீதிபதி ஒரு மோசமான முடிவை எடுத்துள்ளார். ஒரு தவறு நடைபெற்றுள்ளது குறித்து நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதனை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, அந்தத் தவற்றை சரி செய்வதற்கு முயலவேண்டும். நீதிமன்றத்தின் இந்தச் செயல் சரியானதல்ல. இங்கு வழங்கப்பட்டுள்ளது நீதியே அல்ல” என்று தெரிவித்துள்ளார். மேலும் தவறுதலாக விண்ணப்பித்து, விவாகரத்து பெற்றுக்கொடுத்த வழக்கறிஞருக்கு ஆதரவாக இருப்போம் என வழக்கறிஞர்கள் குழுமம் தெரிவித்துள்ளது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.