வரும் ஏப்ரல் மாதம் 6-ம் தேதி ஒரு அதகளத்தைச் செய்யவிருக்கிறது ஏத்தர் நிறுவனம். ‛இந்தியாவின் பெரிய, அகலமான சீட் கொண்ட முதல் ஸ்கூட்டர்’ என்ற பெருமையுடன் ரிஸ்டா (Rizda) என்கிற ஸ்கூட்டரைக் கொண்டு வரப் போகிறது ஏத்தர். 

450X ஸ்கூட்டரைவிட இது எந்தவிதத்திலும் சோடை போய்விடக் கூடாது என்று பார்த்துப் பார்த்து இதை டெஸ்ட் செய்து வருகிறார்கள் ஏத்தர் நிறுவனத்தினர். 

ரிஸ்டா ஸ்கூட்டரின் சீட் இப்படித்தான் ஃபீலிங் தருமாம்!

முதலில் 450X-ல் உள்ள அதே பேட்டரி பேக்கை இதில் பொருத்த வேண்டும் என்கிற முடிவில், அதைச் செய்தும் விட்டது ஏத்தர். அதனால் பெர்ஃபாமன்ஸிலும், ரேஞ்சிலும் எந்தக் குறையும் இருக்காது. இப்போது உள்ளதுபோலவே சிங்கிள் சார்ஜுக்கு ரேஞ்ச் சுமார் 100 கிமீ-யைத் தாண்டும். அதேபோல் சார்ஜிங்கும் 4.30 மணி நேரம்தான் பிடிக்கும். 

இப்போது, 450X-ல் இருக்கும் TFT டிஸ்ப்ளே செமையாக இருப்பதாக வாடிக்கையாளர்களிடம் இருந்து ஃபீட்பேக் கிடைக்க, அந்த டச் ஸ்க்ரீனையே தனது புது ரிஸ்டா ஸ்கூட்டருக்கும் மாட்டிவிட்டார்கள். 

அதைத் தாண்டி ஒரு முக்கியமான விஷயம் லேட்டஸ்ட்டாக சென்னை, திருநெல்வேலி போன்ற நகரங்களில் வெள்ளம் வந்ததே! அப்போது ஏத்தர் வாடிக்கையாளர்களிடம் விசாரித்ததில், மழை நேரத்தில்கூட டச் ஸ்க்ரீன் நன்றாகவே வேலை செய்ததாகவும், வெள்ள நீரில் ஏத்தர் 450X ஸ்கூட்டர் எந்தப் பிரச்னையும் செய்யவில்லை என்கிற ஃபீட்பேக்கும் கிடைத்திருக்கிறதாம். இதனால், ஏத்தர் தனது புது ரிஸ்டா ஸ்கூட்டரும் அதே பெயரைப் பெற்றுத் தரவேண்டும் என்று விரும்புகிறது. 

450X ல் உள்ள டச் ஸ்க்ரீன்

இதைப் பரிசோதிப்பதற்காக 400 மிமீ அளவு தண்ணீர் கெட்டிக் கிடக்கும் பள்ளத்தில் ரிஸ்டாவைக் கடுமையான டெஸ்ட்டிங்கில் ஈடுபடுத்தி இருக்கிறது ஏத்தரின் R&D டீம். இந்த வீடியோவைச் சமூக வலைதளங்களில் விட்டு வைரலாக்கவும் செய்திருக்கிறது. இதன் மூலம் தனது IP67 ரேட்டிங் கொண்ட பேட்டரிக்கு எலெக்ட்ரானிக் சம்பந்தமாக எந்தக் கோளாறும் ஏற்படவில்லை என்பதை நிரூபிப்பதற்கான டெஸ்ட்டிங் வீடியோ அது. மேலும் அத்தனை ஆழமான இறக்கத்திலும் பாதி ஸ்கூட்டர் மூழ்கும் அளவுள்ள நீரில் அது எந்தவிதத் திணறலும் இல்லாமல் செல்கிறது. 

சில நாட்களுக்கு முன்பு, ஏத்தர் இன்னொரு விஷயமும் செய்தது – ரிஸ்டா ஸ்கூட்டரில் இருந்து பேட்டரி பேக்கைக் கழற்றி, சுமார் 40 அடி உயரத்தில் இருந்து கீழே விழ வைத்திருக்கிறது. அப்போதும் பேட்டரிக்கு எதுவும் ஆகவில்லையாம். 

ஓப்பனிங் நல்லாத்தான் இருக்கு; அதேபோல் ஃபினிஷிங்கும் நல்லா இருக்க எல்லாம் வல்ல ஏத்தர் வாடிக்கையாளர்கள் சார்பா வேண்டிக்கலாம்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.