(Shein) ஷீன் எனப்படும் பிரபல ஃபேஷன் பிராண்டிலிருந்து உடைகள் ஆர்டர் செய்த அமெரிக்காவைச் சேர்ந்த அன்னா எலியட் என்கிற பெண்மணி, தனது ஆர்டரில் எதிர்பாராதவிதமாக ரத்த மாதிரி குப்பி (Blood Sample) டெலிவரி செய்யப்பட்டதையடுத்து, அதிர்ச்சிக்குள்ளாக்கினார். இது தொடர்பாக அவர் பதிவிட்ட வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த எலியட் என்பவர், பிரபல ஃபேஷன் பிராண்டான ஷீனிடமிருந்து உடைகள் ஆர்டர் செய்திருக்கிறார். ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த நிலையில், எலியட்டுக்கு நிறுவனம் தரப்பிலிருந்து அவர் ஆர்டர் செய்த தொகுப்பு வந்து சேர்ந்திருக்கிறது. ஆனால், அதில் அவர் ஆர்டர் செய்த உடைகள் இல்லை… மாறாக அதிர்ச்சியூட்டும் வகையில் ரத்த குப்பி (Blood Sample) இருந்திருக்கிறது.

எலியட் – ரத்த மாதிரி குப்பி

அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த எலியட், அந்த ரத்த மாதிரியில் குறிப்பிடப்பட்டிருந்த `ரத்தப் பரிசோதனை’ நிலையத்தை நாடி, இது குறித்துக் கேட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து, எலியட் இந்தச் சம்பவம் தொடர்பாக உள்ளூர் காவல்துறையிடம் புகார் தெரிவித்திருக்கிறார்.

மேலும், தனக்கு நடந்த அதிர்ச்சிகர சம்பவம் குறித்து டிக்டாக் மற்றும் யூடியூபில் வீடியோவும் பதிவிட்டிருக்கிறார். அதில் அவர், “உடைகள் ஆர்டர் செய்த எனக்கு, ரத்த மாதிரி குப்பி கிடைத்தது. அது தொடர்பாக அந்தக் குப்பியில் குறிப்பிட்டிருந்த பரிசோதனை மையத்தை நாடி, விளக்கம் கேட்டேன்.

அவர்கள், `நாங்கள் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்கிறோம். பொதுவாக நாங்கள் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மையங்களுக்கு மட்டும்தான் ரத்த மாதிரியை அனுப்புவோம். தனி நபர்களுக்கு அனுப்ப மாட்டோம். எனவே, இது தவறாகக் கையாளப்பட்டு, உங்களை வந்து சேர்ந்திருக்கலாம் எனக் கருதுகிறோம்.’ எனக் கூறினர்.

YouTube

எனக்கு நடந்ததுபோலவே என்னுடைய நண்பர் ஒருவருக்கும் இதே ஷீன் பிராண்டிலிருந்து உடைகளுக்குப் பதிலாக, உபயோகிக்கப்பட்ட ஊசி வந்திருந்தது. இது குறித்து உரிய கவனம் செலுத்த வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.