நீலகிரி மாவட்டம் குன்னூர், சேலாஸ் அருகில் உள்ள தடை செய்யப்பட்ட வனப்பகுதியான செங்குட்டுராயன் மலைப் பகுதிக்கு உள்ளூரைச் சேர்ந்த நண்பர் உதவியுடன் சென்னை மற்றும் தர்மபுரியைச் சேர்ந்த இளைஞர்கள், சுற்றுலா என்ற பெயரில் அத்துமீறி நேற்று நுழைந்துள்ளனர். ஆபத்தை உணராமல் மலை உச்சியில் உலவிக் கொண்டந்தவர்களை தேனீக்கள் திடீரென விரட்டியுள்ளன. தேனீக்களைக் கண்டுப் பதறிய இளைஞர்கள், ஆளுக்கு ஒரு திசையில் தப்பித்து ஓடியுள்ளனர்.

செங்குட்டுராயன் மலை

நிலைமை சீரானதும் அனைவரும் ஒன்றுகூடிய நிலையில், ஒருவர் மட்டும் மாயமாகியுள்ளார். பல இடங்களில் நீண்ட நேரமாக தேடியும் அந்த இளைஞரை கண்டுபிடிக்க முடியவில்லை. இது தொடர்பாக காவல்துறையிடம் நேற்று மாலை 7 மணியளவில் தகவல் தெரிவித்துள்ளனர். மீட்பு வீரர்கள் மற்றும் வனத்துறையினருடன் சென்று தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இருள் மற்றும் அடர் வனப்பகுதி என்பதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

இன்று காலை மீண்டும் மீட்பு பணியைத் தீவிரப்படுத்தியுள்ளனர். மலை உச்சியில் இருந்து சுமார் 300 அடி பள்ளத்தில் இளைஞரின் சடலம் கிடப்பதை ட்ரோன் கேமிரா மூலம் கண்டறிந்துள்ளனர். பலமணி நேரம்‌ போராட்டத்திற்கு பிறகு இளைஞரின் உடலை மீட்டு குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆபத்தை உணராமல் தடை செய்யப்பட்ட மலை உச்சிக்கு அத்துமீறி நுழைந்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இளைஞர் சடலம்

இந்த சம்பவம் குறித்து பேசிய காவல்துறையினர், “இன்ஸ்டாகிராம் நண்பர்களான இந்த குழுவினர் பல பகுதிகளில் ஐ.டி‌ துறையில் பணியாற்றி வந்துள்ளனர். குன்னூரைச்‌ சேர்ந்த நண்பர் உதவியுடன் தடைசெய்யப்பட்ட அடர்ந்த வனத்துக்குள் அத்துமீறி‌ நுழைந்துள்ளனர். தேனீக்களிடமிருந்து தப்பிக்க முயன்று 300 அடி பள்ளத்தில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்திருக்காறார்‌ 26 வயதான இளைஞர் பிரவீன் குமார். சாகச சுற்றுலா என்ற பெயரில் ஒருசில யூடியூப் வீடியோக்களைப் பார்க்கும் இளைஞர்கள் இதுபோன்ற ஆபத்தில் சிக்கிக் கொள்கிறார்கள். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு விசாரணை மேற்கொண்டு வருகிறோம் ” என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.