“PM Shri பள்ளிகளைத் தமிழகத்தில் தொடங்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.” – அண்ணாமலை

நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் திட்டம் தான் PM SHRI பள்ளி திட்டம். அந்த திட்டத்தை செயல்படுத்த கல்வி அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்று நேற்று வெளியான பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக பாஜக மாநில தலைவர் “மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த, 2020 ஆம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கையில் வரையறுக்கப்பட்டுள்ள, காலை உணவுத் திட்டம், தன்னார்வலர்கள் மூலம் சமுதாயத்தை உள்ளடக்கிய பயிற்றுவித்தல் (இல்லம் தேடிக் கல்வி) போன்றவற்றை, வேறு வேறு பெயர்களில் செயல்படுத்திய தமிழக அரசு, தற்போது, முழுவதும் தேசியக் கல்விக் கொள்கையின் அடிப்படையில் அமைந்துள்ள, PM Shri பள்ளிகளைத் தமிழகத்தில் தொடங்க முடிவெடுத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

பள்ளி மாணவர்கள், பல்துறை அறிவையும், பலமொழிப் புலமையும், தொழிற்கல்வித் திறனையும் ஒருங்கே பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள தேசிய கல்விக் கொள்கை 2020, அடுத்த தலைமுறைக்குச் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்ள உதவும் கருவியாக அமையும். நமது மாணவர்கள் நலனுக்காக, தமிழக அரசு, அனைத்துப் பள்ளிகளிலும், இதனை நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்,

இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு: இன்று உத்தரவு பிறப்பிக்கிறது டெல்லி உயர் நீதிமன்றம்!

இரட்டை இலை

இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுக கட்சிக்கொடியை பயன்படுத்துவது தொடா்பாக அளித்துள்ள மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி முன்னாள் முதலமைச்சா் ஓ.பன்னீா்செல்வத்தின் ஆதரவாளா் புகழேந்தி டெல்லி உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். புகழேந்தி தொடர்ந்த மனுவில் இன்று எழுத்துப்பூர்வமாக உத்தரவு பிறப்பிக்கப்படும் என டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்திருக்கிறார். இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில் இந்த வெளியாகவுள்ள உத்தரவு அதிக கவனம் பெற்றிருக்கிறது!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.