96வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் நடைபெற்றது.

சிவப்பு பேட்ஜ்

கடைசி வருடம் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற இவ்விழாவில் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான விருதை ஆர் ஆர் ஆர் படத்தில் வரும் ‘நாட்டு நாட்டு’ பாடல் தட்டிச் சென்றது. மேலும் சிறந்த ஆவணப்படத்திற்கான விருதை The Elephant Whisperers ஆவணப்படம் தட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

இந்த வருடம் இவ்விழா மார்ச் 10ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் ஞாயிற்றுக்கிழமை போராட்டக்காரர்கள் இஸ்ரேல்-ஹமாஸ் போரை நிறுத்தக் கோரி அரங்கத்தின் வெளியே போக்குவரத்தைத் தடுத்தனர். ஆதலால் திட்டமிட்டபடி இந்த விருது விழா நடக்கவில்லை. சற்று தாமதமாக இவ்விழா தொடங்கியது.

இந்த விழா மேடையில் “படுகொலை முதலியவற்றை மறுக்கும் யூத மனிதர்களாக நாங்கள் இங்கு நிற்கிறோம்” என ஆஸ்கர் விருது விழாவில் காஸா தாக்குதல்களை நிறுத்துமாறு ‘ஜோன் ஆஃப் இண்ட்ரஸ்ட்'(Zone of Interest) பட இயக்குநர் ஜொனாதன் கிளேசர் கூறியிருக்கிறார்.

மேலும் புகழ்பெற்ற பாடகி பில்லி ஐலீஷ், ‘பூவர் திங்ஸ்’ திரைப்படத்தின் நடிகர் மார்க் ரபல்லோ உட்பட பலரும் இந்த 96வது அகாடமி விருதுகளுக்காக சிவப்பு கம்பளத்தில் சிவப்பு ஊசிகளை அணிந்து கொண்டு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போரை நிறுத்துவது குறித்து வலியுறுத்தி வருகை தந்திருந்தனர்.அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனிடம் 400 கலைஞர்கள் போர் நிறுத்தத்தை வலியுறுத்திக் கையெழுத்திட்டனர். அந்த 400 கலைஞர்களில் சிலர் இந்த ஆஸ்கர் விருது விழாவில் பங்கேற்றனர். அவர்கள்தான் இந்த சிவப்பு பேட்ஜை இந்த விழாவுக்கு அணிந்து வந்தார்கள்.

இஸ்ரேல் – பாலஸ்தீனம் | போர் பதற்றம்

கடந்தாண்டு அக்டோபர் 7-ம் தேதி அன்று தெற்கு இஸ்ரேலில் உள்ள குடிமக்கள் மீது ஹமாஸ் ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் 250 நபர்களை பணையக்கைதிகளாக மீண்டும் காஸா பகுதிக்குள் அழைத்துச் சென்றனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் காஸா மீது குண்டுவீச்சு மற்றும் படையெடுப்பு நடத்தியது. காஸாவில் 30,000- க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஹமாஸ் நடத்தும் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸா பகுதியில் பஞ்சம் தவிர்க்க முடியாதது என்றும் குழந்தைகள் கடும் பசியினால் இறந்து வருகிறார்கள் என்றும் ஐநா சபை எச்சரித்துள்ளது. இப்படியான கடுமையான சூழலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சிவப்பு பேட்ஜ் அணிந்து வந்த கலைஞர்களின் செயல் வரவேற்கத்தக்கது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.