இயற்கை வளங்களை காக்க வேண்டும். மாசுக்களை குறைக்க வேண்டும் என்ற நோக்கில் குறைந்து வரும் எரிபொருள்களின் தேவைக்கு மாறாக கண்டுபிடிக்கப்பட்டது தான் எலக்ட்ரிக் வாகனங்கள். இது பெருமளவில் சாமானியர்கள் இடையே பயன்பாட்டில்  இல்லை என்றாலும் அறிமுகமாகிய சில ஆண்டுகளிலேயே தனக்கென வாகன வரலாற்றில் தடம் பதித்து விட்டது. என்னத்தான் ட்ரெண்ட் ஆனாலும், எலக்ட்ரிக் வாகனங்களை வாங்கிய‌ வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு  தொல்லைகளை தந்த வண்ணமே இருக்கிறது. இதற்கு சாட்சியாக விற்பனை செய்த எலக்ட்ரிக் வாகனங்களை ஒரு நிறுவனம் திரும்ப பெறும் அறிவிப்பை வெளியிட்டதும் நாம் அறிந்ததே. ஆனால் இந்த எலக்ட்ரிக் வாகனங்களே சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு  பெரும் தலைவலியாக மாறும் என்று சொல்வது போல் இருக்கிறது இந்த ஆய்வு முடிவுகள்.

டேட்டா பகுப்பாய்வு நிறுவனமான எமிஷன் அனாலிடிக்ஸ் (EMISSION ANALYTICS) நிறுவனம் சமீபத்தில் மின்சார வாகனங்கள் குறித்த ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இதற்காக பிரபல எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்கும் நிறுவனங்களின் வாகனங்கள் ஆய்விற்காக உட்படுத்தப்பட்டது. இந்த ஆய்வின் முடிவு குறித்த அறிக்கையில் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களால் இயங்கும் வாகனங்களால் ஏற்படும் மாசுபாட்டை விட புது ரக எலக்ட்ரிக் வாகனங்கள் 1850 மடங்கு அதிக மாசுக்களை ஏற்படுத்துவது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

எலக்ட்ரிக் வாகனங்களின் பேட்டரிகள், பெட்ரோல், டீசல் வாகனங்களின் இன்ஜின்களை விட, எடை அதிகம். இதனால் வாகனத்தை நிறுத்துவதற்காக எலக்ட்ரிக் வாகனங்களில் பிரேக்கை அழுத்தும் போது, அதிக அளவிலான அழுத்தத்தை டயர்களுக்கு  கொடுக்கிறது. இதனால் பெருமளவில் டயர்களில் தேய்மானம் ஏற்பட்டு மாசு துகள்களை வெளியேற்றுகிறது. இத்துகள்கள் காற்றில் கலந்து காற்று மாசை ஏற்படுத்துகிறது.

எலக்ட்ரிக் கார்

இதற்குக் காரணம் எலக்ட்ரிக் வாகனங்களின் டயர்கள் இயற்கை ரப்பர் கொண்டு தயாரிக்கப்படாமல் கச்சா எண்ணெயிலிருந்து செயற்கை ரப்பரைக் கொண்டு தயாரிக்கப்பட்டதே. குறிப்பிட்டு சொன்னால் அரை டன் அதாவது 1100 பவுண்ட் எடை கொண்ட பேட்டரி பொருந்திய எலக்ட்ரிக் வாகனம் பெட்ரோல் டீசல் எரிபொருள் வாகனத்தை விட 400 மடங்கு அதிக மாசு துகள்களை ஏற்படுத்துவதாக ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பம் வளர்ச்சி அடைய அடைய இயற்கை சூழலும்‌ மறித்து கொண்டுத்தான் போகும் என்று வருத்தம் தெரிவிக்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள்.

Source: Electric Vehicles Emit More Particle Pollution Than Petrol, Diesel Cars, Claims Study

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.