தங்கம் என்று சொன்னாலே, கழுத்து நிறைய தங்க நகைகள் அணிந்தபடி மணப்பெண் கோலம் பூண்ட ஒரு பெண்ணின் சித்திரம் மனதிற்குள் வரும்.அதேபோல வைரம் என்று கூறும்போதே நம் மனம் உடனே ஒரு காதலன் தன் காதலிக்கு வைர மோதிரம் கொடுத்து ப்ரொபோஸ் செய்வது போலத் தோன்றும்.  

தங்கமா, வைரமா என்று கேட்கும்பொழுது, பெரும்பாலும் மக்கள் இரண்டையுமே விரும்புகின்றனர். பட்டுப் புடவைகளுக்கும், பாரம்பரிய உடைகளுக்கும் பொருந்தும் தங்க நகை ஒரு பக்கம். மேற்கத்திய உடைகள், டிசைனர் உடைகள், ஜீன்ஸ், டி-ஷர்ட் என தற்போதைய ட்ரெண்டிற்கு ஏற்ப வரும் உடைகளுக்குப் பொருந்தும் வைரம் ஒரு பக்கம். கோல்ட் பிளேடட், சில்வர் பிளேடட் நகைகளில் வைரக் கல் பதித்து வரும் நகைகளுக்கு தனி மவுசு உண்டு தான் என்றாலும், நம் பாரம்பரியத்துடன் கலந்த தங்கத்தை என்றும் விட்டுத் தர முடியாது.ஆனால், நம்மில் பலரும் தங்கத்தைவிட வைரம் விலை உயர்ந்தது என்று கருதியே, அதை வாங்காமலே தவிர்த்து வருகிறோம். போலி வியாபாரிகளின் வரவும், சந்தையில் போலி வைரக் கற்களின் விற்பனையும் அதற்கு மேலும் தீனிபோட்டது. இதனால், வைரத்தின் தரம், தூய்மை, எடை குறித்து நிறைய கேள்விகள் எழுப்பப்படுகிறது.

இது ஒரு புறம் இருக்க, தங்கம் தான் மக்களின் நம்பிக்கையாகவே இருந்து வருகிறது. தங்கம் என்றாலே மகிழ்ச்சி தான், கல்யாணமோ, கிரஹப்ரவேசமோ, வளைக்காப்போ… தங்கம் நம் வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. அப்படி இருக்க, அதை நம்பிக்கையான இடத்திலிருந்து வாங்க வேண்டாமா? 100% தரத்துடனும், சந்தை விலையிலிருந்து சரியாக 20%-30% தள்ளுபடியுடனும், மக்களின் நம்பிக்கையுடனும் தங்கம் மற்றும் வைர நகைகளை உருவாக்கி, அவற்றை மக்களிடம் நேரடியாகவும் விற்பனை செய்து வருகிறது பிரில்லியண்ட் கட். லட்ச லட்சமாய் செலவு செய்து நகைகள் வாங்கும்போதும் சரி, பழைய நகைகளை எக்ஸ்சேஞ்ச் செய்யும்போதும் சரி, ஷோரூம்களில் நாம் சந்திக்கும் பிரதான பிரச்னை அதிகப்படியான செய்கூலி மற்றும் சேதாரம். இதைக் குறைத்து, உற்பத்தி விலையிலேயே உயர்தர தங்கம் மற்றும் வைர நகைகளை வழங்குகிறது ‘பிரில்லியண்ட் கட்’ நிறுவனம்.

நகைகளை இயந்திரத்தில் உற்பத்தி செய்து தருவதால், பிரில்லியண்ட் கட்-ல் 30% வரை சேதாரம் குறைவு. கைவினை நகைகளைவிட 50% எடை குறைவாகவும், வலிமையானதாகவும் பிரில்லியண்ட் கட் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் நகைகள் உள்ளன. இவை BIS ஹால்மார்க் சான்றிதழ் பெற்ற நகைகள் என்பதால் எவ்வித தயக்கமும் இன்றி நகைகளை இங்கு வாங்கலாம். அதுமட்டுமில்லாமல், சருமப் புற்றுநோயை உருவாக்கும் கேடிஎம் (KDM) துளியும் இல்லாமல் பிரில்லியண்ட் கட் நகைகள் தயாரிக்கப்படுகின்றன.
வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தங்கம் மற்றும் வைர நகைகளின் டிசைன்களை கஸ்டமைஸ் செய்தும் பெற்றுக்கொள்ளலாம்.

பழைய நகைகளை எக்ஸ்சேஞ்ச் செய்து புதிய நகைகள் வாங்கும்போது, பழைய நகைகளை அன்றைய தினத்திற்குரிய விலையிலேயே பிரில்லியண்ட் கட் நிறுவனம் பெற்றுக்கொள்ளும். இது வாடிக்கையாளர்களுக்கு லாபகரமாகவும் அமையும்.  
இப்போது தங்க சேமிப்புத் திட்டத்தையும் பிரில்லியண்ட் கட் அறிமுகப்படுத்தியுள்ளது. 1-3 வருடங்களுக்கு கிட்டத்தட்ட 21% வட்டியை இதனால் லாபமாகப் பெறமுடிவது சிறப்பு. தங்கம் மற்றும் வைர நகைகளை வாங்க ஆசைப்படும் நிறைய பேருக்கு, நகை விலையுடன் சேர்த்து செய்கூலி மற்றும் சேதாரத்திற்கு கொடுக்கப்படும் விலை தான், தலை சுற்ற வைக்கிறது.
ஆனால், பிராண்டட் ஷோரூம்களைக் காட்டிலும் தரத்தில் எந்த வித சமரசமும் செய்துகொள்ளாமல், உற்பத்தி விலையிலேயே நகைகளை விற்பனை செய்யும் பிரில்லியண்ட் கட், ஒரு நம்பகத்தன்மை வாய்ந்த நிறுவனமாக விளங்குகிறது. மேலும் விவரங்களுக்கு- 98402 29990 என்ற எண்ணை தொடர்புக் கொள்ளவும்

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.