பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் எழுதிய ‘மன் கீ பாத் – மனதின் குரலுக்கு ஓர் இந்திய குடிமகனின் 108 கேள்விகள்” என்ற புத்தகம் வெளியீட்டுவிழா நாகர்கோவிலில் நடந்தது. மாநில சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் புத்தகத்தை வெளியிட்டார். மாநில திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் பீட்டர் அல்போன்ஸ் பேசுகையில், “பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் கருத்தை முறியடிக்கும் விதமாக இந்த புத்தகத்தை எழுதிய மனோ தங்கராஜுக்கு வாழ்த்துகள். நாம் கூடியிருக்கிற இந்த காலம் இந்திய வரலாற்றிலே மிக முக்கியமான காலம். 17-வது நாடாளுமன்றத்தை முடித்து 18-வது நாடாளுமன்றத் தேர்தலுக்காக இந்த தேசம் காத்திருக்கின்றது. பொதுவாக அரசியல் கட்சி தலைவர்களுக்கு தங்களுடைய நீண்ட பயணத்தில் நாடாளுமன்ற சட்டமன்ற அமைச்சர்களாக பணியாற்றக் கூடிய வாய்ப்புகள் கிடைப்பதுண்டு. அப்படி கிடைக்கின்ற போதெல்லாம் பலர் தாங்கள் வகிக்கும் பதவி நிரந்தர பதவி என்று நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால், நாடாளுமன்ற உறுப்பினரோ, சட்டமன்ற உறுப்பினரோ, அமைச்சஎ என்பதோ நாம் ஏற்றுக் கொண்டிருந்த பயணத்தில் ஒரு சிறிய கட்டம் தானே ஒழிய அது நிரந்தரம் அல்ல.

நாம் எல்லோரும் சமூக போராளிகள். எந்த நேரத்திலும் போராட்டத்திற்கான ஆயுதத்தை கூர்மைப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். கருணாநிதி முதலமைச்சர் நாற்காலியில் இருந்தாலும் சரி, எதிர்க்கட்சி நாற்காலியில் இருந்தாலும் சரி, திராவிட முன்னேற்றக் கழக தலைவர் என்கிற பதவியில் இருந்தாலும் சரி எந்த காலகட்டத்திலும் அவர் தன்னிடமிருந்து எழுத்து திறமையை கூர்மையாக்கி கொண்டே இருந்தார். அதனால்தான் இன்று கருணாநிதி என்கிற மாபெரும் ஆளுமை உலகம் முழுவதும் கொண்டாடப்படுகின்ற ஆளுமையாக இருக்கிறது.

அந்த வகையிலே அமைச்சர் மனோ தங்கராஜ் அமைச்சர் பதவி கையிலே கிடைத்துவிட்டது, இதுதான் நிரந்தரம் என்று எண்ணவில்லை. அமைச்சருக்கு இருக்கின்ற அலுவல் நெருக்கடியில் தகவல்களை திரட்டி அதை அருமையாக தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிட்டு இருக்கிறார்.

புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டவர்கள்

1947-க்கு பிறகு 1950 ஜனவரி மாதம் 26-ம் தேதி வரை இந்த தேசத்தை ஒரு குடியரசாக கட்டி அமைப்பதற்காக இந்த தேசத்தினுடைய முன்னோர்கள் ஏற்றுக்கொண்ட மிகப்பெரிய தியாக வரலாற்றை பற்றி மோடி-க்கு ஏதாவது அடிப்படை புரிதல் உண்டா. மோடி பிறப்பதற்கு முன்பே இந்த தேசம் சுதந்திரத்தை பார்த்து விட்டது. நேரு ஏறக்குறைய 200-க்கும் அதிகமான் பொதுத்துறை நிறுவனங்களை ஏற்படுத்தினார். சுதந்திர இந்தியாவின் ஒவ்வொரு பிரதமரும் பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கிக் கொண்டே வந்திருக்கிறார்கள். 256 பொதுத்துறை நிலவரங்களை தன்னுடைய பத்தாண்டு காட்சி காலத்தில் தனியாருக்கு வழங்கியிருக்கிறார் மோடி. ஒரு பொதுத்துறை நிறுவனத்தை கூட தொடங்காத ஒரே பிரதமர் நரேந்திர மோடி. நாட்டை இரண்டு பேர் விற்கிறார்கள், இரண்டு பேர் வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள். கேரள முன்னாள் முதல்வர் ஏ.கே.ஆன்றணியின் மகன் அனில் ஆன்றணி, முன்னாள் முதல்வர் கே.கருணாகரனின் மகள் பத்மஜா என பலரையும் தங்கள் பக்கம் இழுத்துவிட்டனர்.

குற்றம் செய்தவர்களை தண்டிப்பதிலோ, நடவடிக்கை எடுப்பதிலோ, கைது செய்வதிலோ, சிறைக்கு அனுப்புவதிலோ எங்களை யாருக்கும் அச்சமும் இல்லை தடையும் இல்லை பயமும் இல்லை. ஒரு சிறிய பொறுப்பில் இருக்கும் ஜாபர் சாதிக் போதை மருந்து கடத்தியதாக நீங்கள் குற்றம் சாட்டுகிறார்கள். அந்த குற்றச்சாட்டு வருவதை பார்க்கின்ற போது எங்களுக்கு திகைப்பாக இருக்கிறது. நம்முடைய எதிரிகள் எவ்வளவு ஆபத்தானவர்கள் என்று புரிந்துகொள்ளுங்கள்.  இந்தியா கூட்டணிக்கு இருக்கிற வெற்றி வாய்ப்பினையும் முறியடிப்பதற்காக, இந்த கூட்டணிக்கு தலைமை வைத்திருக்கின்ற தி.மு.க-வை கொச்சைப்படுத்துவதற்கு அரசியல் நாடகத்தை பா.ஜ.க அரங்கேற்றியதாக நான் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன்.

2024 நாடாளுமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்படவில்லை என்று சொன்னால் நாம் சந்திக்கின்ற கடைசி தேர்தலாக இந்த தேர்தல் இருக்கும். பல்வேறு மனவருத்தங்கள் மனக்கசப்புகள் கூட்டணி கட்சிகளுக்குள் இருந்தாலும் எல்லாவற்றையும் மறந்து விட்டு இந்த நாடாளுமன்ற தேர்தல் என்பது நாமும் நமது இயக்கங்களும் பணி செய்ய வேண்டும்” என்றார்.

அமைச்சர் மனோதங்கராஜ் எழுதிய ‘மன் கீ பாத் – மனதின் குரலுக்கு ஓர் இந்திய குடிமகனின் 108 கேள்விகள்’ என்ற புத்தகத்தை பீட்டர் அல்போன்ஸ் வெளியிட்டார்

கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் பேசுகையில், “அமைச்சர் மனோ தங்கராஜ் எதையும் லவ் பண்ணிதான் பண்ணுவார். அதனால்தான் இந்த புத்தகத்தைக்கூட காதலின் குறியீடான 143 பக்கங்கள் எழுதியுள்ளார்” என்றார். நிறைவாக ஆசிரியர் உரையில் அமைச்சர் மனோதங்கராஜ் பேசுகையில், “அமைச்சராக இருப்பதால் இந்த புத்தகத்தை யோசித்து வெளியிடுங்கள் என சிலர் சொன்னார்கள். தலைமையிலும், வழக்கறிஞரிடமும் கேளுங்கள் என்றனர். முதல்வர் ஸ்டாலின் ஒப்புதல் கொடுத்ததால் வெளியிடுகிறோம். மோடி என்கின்ற மனிதர் என்றைக்காவது பத்திரிகையை சந்தித்து நீங்கள் பார்த்திருப்பீர்களா. அவர் எந்த பத்திரிகையும் சந்திக்க மாட்டார். நாடாளுமன்றத்திலாவது வந்திருந்து எதிர்க்கட்சிகள் எழுப்புகின்ற கேள்விகளுக்கு அல்லது நாட்டிலே நடைபெறுகின்ற முக்கியமான பிரச்னைகளுக்கு பதில் சொல்வாரா என்று சொன்னால் அதுவும் இல்லை. மணிப்பூர் விவகாரத்தில் அவரை பேச வைப்பதற்காக ஒரு நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டிய நிலைமைக்கு இந்த நாடு தள்ளப்பட்டது.

அவர் மன் கீ பாத் என்ற நிகழ்ச்சியில் ரேடியோவில் பேசுவார். அவரது பேச்சை மாணவர்கள், அலுவலர்கள் கேட்க வேண்டும். பெண்களை அதிகாரப்படுத்தியிருக்கிறோம் என்பார். ஆனால் பெண்கள் சந்திக்கும் முக்கிய பிரச்னைகள், ஆஷிபா, மணிப்பூர் பெண்கள், மல்யுத்த வீரங்கணைகள் பட்ட துன்பம் பற்றி பேசமாட்டார். மேக் இன் இந்தியா என்பார் பிரதமர் மோடி. ஆனால், அனைத்தும் சீனா தயாரிப்பாக உள்ளது. சீனாவை பற்றி ஒருவார்த்தைக்கூட பேசாத பிரதமர் மோடி. இவர் கோழை பிரதமர் என சீனாவுக்கு தெரிந்திருக்கிறது. மனதின் குரல் நிகழ்ச்சியில் அவரிடம் மக்கள் முன் வைக்காத கேள்விகளை அவருக்கு நேரகா கேட்க்கும் விதமாக இந்த புத்தகத்தை வெளியிட்டிருக்கிறோம். ஆர்.எஸ்.எஸ்.பா.ஜ.க கேள்விகேட்டால் அதற்கான பதில்களுக்கான தரவுகளை தந்திருக்கிறேன். சாமானிய குடிமகன் பிரதமர் செய்யத்தவறியதை கேட்பது தான் இந்த புத்தகத்தின் நோக்கம்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.