96வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள டால்பி தியேட்டர் அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது.

ஜிம்மி கிம்மல் 4வது முறையாக இவ்விருது விழாவைத் தொகுத்து வழங்கினார். இதில் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் கிலியன் மர்ஃபி நடித்துள்ள ‘ஓப்பன்ஹெய்மர்’ படம் 13 பிரிவுகளில் போட்டியிட்டு 7 பிரிவுகளில் விருதினை வென்றுள்ளது. இதனைத் தொடர்ந்து ‘புவர் திங்ஸ்’ திரைப்படம் நான்கு விருதுகளை வென்றுள்ளது.

Oscars 2024 – 20 Days In Mariupol

இதில் உக்ரைன் போரை மையப்படுத்தி எடுத்த ’20 டேஸ் இன் மரியுபோல்’ (20 Days In Mariupol) சிறந்த ஆவணப்படத்திற்கான விருதைப் பெற்றிருக்கிறது. இப்படத்திற்கான விருதைப் பெற்றுக்கொண்ட பின் பேசிய படத்தின் இயக்குநர் மிஸ்டிஸ்லாவ் செர்னோவ், “உக்ரைனுக்குக் கிடைத்த முதல் ஆஸ்கர் விருது என்று சொல்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இப்படி ஒரு படத்தை எடுக்க எனக்கு விருப்பமில்லை.

அதாவது போரை மையமாக வைத்துப் படத்தை எடுக்கக்கூடிய ஒரு சூழல் வந்திருக்கக்கூடாது. இந்த விருதை ரஷ்யாவுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அதற்குப் பதிலாக ரஷ்யர்கள், எனது சக உக்ரேனியர்கள் பல்லாயிரக்கணக்கானவர்களைக் கொன்று வருவதை நிறுத்த வேண்டும்.

Oscars 2024 – 20 Days In Mariupol

அதுமட்டுமின்றி பணயக்கைதிகள், தங்கள் நிலங்களைப் பாதுகாக்கும் ராணுவ வீரர்கள், தற்போது சிறையில் உள்ள பொதுமக்கள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்று உருக்கமாகப் பேசியிருக்கிறார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.