Doctor  Vikatan: சோளம் ஆரோக்கியமான உணவு என்கிறார்கள்…. அப்போது சோளத்திலிருந்து தயாரிக்கப்படும் பாப்கார்னும் ஆரோக்கியமானதுதானே…. குழந்தைகளுக்கான நொறுக்குத்தீனியாக பாப்கார்ன் கொடுப்பது சரியானதா….?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்

ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்

நீங்கள் கேட்டிருப்பதுபோல சோளத்திலிருந்து செய்யப்படும் பாப்கார்ன், உண்மையில் ஆரோக்கியமான ஸ்நாக்ஸ்தான். அதில் நிறைய நார்ச்சத்தும் குறைவான கலோரிகளும் இருக்கும். 

தவிர, பாப்கார்னில் வைட்டமின் பி, மக்னீசியம், துத்தநாகம் உள்ளிட்ட அத்தியாவசிய சத்துகளும் இருக்கும். ஆனால், பாப்கார்னின் ஆரோக்கியம் என்பது அது எந்த முறையில் தயாரிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்தது. அதாவது, சிறிதுகூட எண்ணெயோ, வெண்ணெயோ, உப்போ சேர்க்காமல் தயாரிக்கப்படும்பட்சத்தில் அது முழுக்க முழுக்க ஆரோக்கியமானதுதான்.

ஆனால், அதுவே நிறைய எண்ணெய், வெண்ணெய், உப்பு, செயற்கை சேர்க்கைகள், சுவையூட்டிகள் சேர்த்துத் தயாரிக்கப்படும் பாப்கார்ன் என்றால் ஆரோக்கியமற்ற உணவு என்பதில் சந்தேகமில்லை.

பாப்கார்ன்!

கொழுப்பு சேர்க்காத பாப்கார்னை குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். ஆரோக்கியமாகத் தயாரிக்கப்படுவது எந்த அளவுக்கு முக்கியமோ, அதைவிட முக்கியம், சுகாதாரமாகத் தயாரிக்கப்படுவதும். கண்ட இடங்களில் தயாரிக்கப்படுவதை குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்காதீர்கள்.

எந்த வயதுக் குழந்தைக்கு அதைக் கொடுக்கிறீர்கள் என்பதும் முக்கியம். ரொம்பவும் சின்னக் குழந்தைகள் என்றால் பாப்கார்ன் தொண்டையில் சிக்கிக்கொள்ளும் அபாயமும் இருக்கிறது என்பதால் கவனம் தேவை. எனவே, என்ன சாப்பிடுகிறோம் என்பதை உணர்ந்து, மென்று விழுங்கத் தெரிந்த வயதுள்ள குழந்தைகளுக்கு மட்டுமே அதைக் கொடுக்கவும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.