‘பெரிய மீசை, பெரிய தாடி இருக்கணும்… ஜிம் பாடியா இருக்கணும்… பாக்க சாஃப்ட்டா (Soft) இல்லாம, ரக்கட்டா (rugged) இருக்கணும்’-ன்னு தனக்கு வரப்போற லவ்வர் அல்லது கணவர் பத்தி ஏகப்பட்ட ஆசைகள் பொண்ணுங்களுக்கு இருக்கு.

Love: பெரிய மீசை, பெரிய தாடி இருக்கணும்…

பொதுவாவே எல்லா பொண்ணுங்களுக்கும் தனக்கு வரப்போற ஆளு ‘இளவரசர்’ மாதிரி இருக்கணும்னு கொள்ளை ஆசை. ‘புயல் மாதிரி வந்து பூப்போல அவங்களை தூக்கிட்டுப் போயிடணும்’, ‘ஆயிரம் யானைகள் சூழ… வெண்ணிலா வெளிச்சத்துல குதிரை மேல வந்து அலேக்கா அள்ளிட்டுப் போகணும்’, ‘யாரு குறுக்க நின்னாலும்… நான் இருக்கேன் உனக்கு’ன்னு சொல்லணும்னு ஏகப்பட்ட கனவுகள் இருக்கும். இந்தக் கனவுகளைப் பூர்த்தி செய்யற மாதிரியான ஆளை தான் பொண்ணுங்க தேடுறாங்க. இதுகெல்லாம் ஒரே பதிலா ‘ரக்கட் பசங்களை’ நினைக்கிறாங்க.

இந்த ஆசைகள், கனவுகள் எல்லாமே பொண்ணுங்களுக்கு காலம் காலமா இருந்துட்டு வந்தாலும், இப்போ இருக்குற பொண்ணுங்க ‘நம்ம ஆளு ரக்கட்டா இருக்கணும்’னு ரொம்பவே எதிர்பார்க்கறாங்க. அதுக்கு அடுத்து சொல்லப்போற விஷயங்கள் முக்கிய காரணங்கள்…

  • சின்ன வயசுல இருந்தே ரொம்ப அன்பு, அரவணைப்போட வளர்க்கப்படறவங்க, தனக்கு வரப்போற ஆளும் அன்பு, அரவணைப்பு, பாதுகாப்புனு மூணு விஷயங்களையும் கொடுக்கணும்னு நினைக்கறாங்க.

  • சாஃப்ட்டான பையனா இருந்து கல்யாணத்துக்குப் பிறகு குடும்பத்தோட பேச்சை கேட்டுட்டு… நம்ம மேல இருக்குற லவ் குறைஞ்சுட்டா என்ன பண்றது?னு பயப்படறாங்க.

Love: அன்பு, அரவணைப்பு, பாதுகாப்பு வேணும்…
  • இந்த சமூக வலைதள உலகத்துல நம்ம சுத்தி நிறைய அட்வென்ச்சர்கள் மற்றும் சர்ப்ரைஸ்கள் நடந்துகிட்டு இருக்கு. இந்த அட்வென்சர் மற்றும் சர்பரைஸ்களை ரொம்ப சூப்பரா ரக்கட் பையனால தனக்குத் தர முடியும்ன்னு நம்பறாங்க.

  • இப்போ வர்ற பெரும்பாலான படங்கள்ல ஹீரோ ரக்கட் பையனா தான் காட்டப்படறாங்க. படத்துல வர்ற ஹீரோ மாதிரி தன்னோட ஆள் இருக்கணும்னா ரக்கட்டா தான் இருக்கணும்னு நினைக்கிறாங்க.

  • சாஃப்ட் பசங்க லவ்வ சொல்லவே பயப்படுவாங்க. இதுவே ரக்கட் பசங்கன்னா லவ்வுக்காக எந்த எல்லைக்கும் போவாங்கன்னு ஒரு பொது பிம்பம் இருக்கு.

  • மொத்தத்துல பார்க்குற படம், ரீல்ஸ், ஷார்ட்ஸ்ல இருக்குற காதல், சர்ப்ரைஸ், அட்வென்சசர் வாழ்க்கைல வேணும்னா, அதை ரக்கட் பசங்களால தான் தரமுடியும்னு நினைக்கிறாங்க.

இப்போ பசங்க பக்கம் வருவோம்…பசங்க எதிர்பார்ப்பு பொண்ணுங்க எதிர்பார்ப்புக்கு மொத்தமா நேர் எதிரி. பொண்ணுங்களுக்கு ரக்கட் பசங்களைப் பிடிக்கற மாதிரி, பசங்களுக்கு சாஃப்ட்டான பொண்ணுங்களை தான் பிடிக்குது. இதுக்கான காரணங்கள்…

  • கையைப் பிடிச்சு பொண்ணுங்களுக்கு எல்லா விஷயங்களையும் காட்டணும்… பாதுகாப்பு தரணும்னு நினைக்கிறாங்க.

  • பசங்களுக்கு விஜயசாந்தி மாதிரி இருக்குற பொண்ணுங்களை விட, ஹாசினி மாதிரி இருக்குற பொண்ணுங்களோட க்யூட்னெஸ் தான் பிடிச்சிருக்கு.

Love: விஜயசாந்தி வேண்டாம்…ஹாசினி வேணும்!
  • அதெல்லாம் முன்ன நடந்தது, இப்போ சமுதாயமே டோட்டலா மாறிடுச்சுனு நினைச்சீங்கன்னா, இன்னமும் சில பசங்க பெண்கள் தன்னோட கன்ட்ரோல்ல இருக்கணும்னு நினைக்கிறாங்க. இந்த நிதர்சனம் சமுதாயத்தை உற்றுப் பார்த்தாலே தெரியும்.

ஆக, பொண்ணுங்களுக்கோ/பசங்களுக்கோ ரக்கட் பார்ட்னர் அல்லது சாஃப்ட்டான பார்ட்னர்களைவிட, மதிப்பு தர்ற பார்ட்னர் அவசியம். முன்னலாம் ‘அந்தக் காலம் மாதிரி இந்தக் காலம் இல்ல’ன்னு சொல்லுவாங்க. ஆனா இப்போ…போன வருஷம் மாதிரி இந்த வருஷமே இல்ல. அவ்ளோ வேகமா இந்த உலகமும், மக்களும் சுத்திட்டு இருக்காங்க. அதனால பொண்ணோ, பையனோ யாரா இருந்தாலும் இந்த உலகத்தோட வேகத்துக்கு வளர்றதுக்கு, அவங்க பார்ட்னர் உதவி செய்யறவங்களா இருக்கணும்.

Love: அவங்கவங்களே…

ஒவ்வொருத்தருக்கு தனி வானம் இருக்கு. அதுல அவங்க பறக்கட்டும்ங்கற எண்ணத்துல…ஒருத்தர் இன்னொருத்தரோட சுதந்திரத்துல தலையிடாம இருக்கணும்.

இனி, ஒரு ஆணோட வெற்றிக்குப் பின்னாடி ஒரு பொண்ணோ…ஒரு பொண்ணோட வெற்றிக்குப் பின்னாடி ஒரு ஆணோ இல்லாம, அவங்கவங்க வெற்றிக்குப் பின்னாடி அவங்கவங்களே இருக்கட்டும் மக்களே…

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.