உலகளவில் உடல் பருமனுடன் (obesity) வாழும் குழந்தைகள், இளம் பருவத்தினர் மற்றும் பெரியவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு பில்லியனைத் தாண்டியுள்ளது என்று தி லான்செட் என்ற மருத்துவ இதழ் வெளியிட்டுள்ள ஆய்வில் தெரிவித்துள்ளது.

உலகமும் அதிகரிக்கும் உடல்பருமனும்…

உடல்பருமன் குறித்து வெளியிடப்பட்டுள்ள ஆய்வு தகவல்கள்,

*உலகம் முழுவதும் குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினரில் 160 மில்லியன் பேர் (65 மில்லியன் சிறுமிகள் மற்றும் 94 மில்லியன் சிறுவர்கள்) உடல்பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1990-ல் இந்த எண்ணிக்கை 31 மில்லியனாக இருந்தது. 

*பெரியவர்களில் 879 மில்லியன் பேர் உடல்பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 504 மில்லியன் பெண்கள், 374 மில்லியன் ஆண்கள் உள்ளனர்.

Weight (Representational Image)

*பெரியவர்களில், உடல் பருமன் விகிதம் பெண்களில் இருமடங்காகவும், ஆண்களில் கிட்டத்தட்ட மூன்று மடங்காகவும் அதிகரித்து உள்ளது. குறிப்பாக, எல்லா நாடுகளிலும் உடல் பருமனாவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.  

*1990 முதல் 2022-க்கு இடைப்பட்ட காலத்தில் குறைவான எடையால் (Underweight) பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரின் விகிதம் பெண்களில் ஐந்தில் ஒரு பங்காகவும், ஆண்களில் மூன்றில் ஒரு பங்காகவும், பெரியவர்களில் பாதியாகவும் குறைந்திருக்கிறது.  

*2022-ல் 77 மில்லியன் சிறுமிகள் மற்றும் 108 மில்லியன் சிறுவர்கள் எடை குறைவாக இருந்தனர். 1990-ல் இந்த எண்ணிக்கை சிறுமிகளில் 81 மில்லியனாகவும், சிறுவர்களில் 138 மில்லியனாகவும் இருந்தது.

இது குறித்து லண்டன் இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த மூத்த எழுத்தாளர் பேராசிரியர் மஜித் எசாட்டி கூறுகையில், “1990-ம் ஆண்டில் உலகின் பெரும்பகுதியில் பெரியவர்களிடையே காணப்பட்ட உடல் பருமன் தற்போது பள்ளிக் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடையே பிரதிபலிக்கிறது என்பது மிகவும் கவலைக்குரியது.

food

அதே நேரத்தில், நூற்றுக்கணக்கான மில்லியன் மக்கள் இன்னும் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக உலகின் சில ஏழ்மையான பகுதிகளில் அண்டர்வெயிட், ஓவர்வெயிட் என இரண்டு வகையான ஊட்டச்சத்து குறைபாட்டையும் சமாளிப்பது இன்றியமையாததாக இருக்கிறது.

இந்த இரண்டு வகையான ஊட்டச்சத்து குறைபாடுகளையும் சமாளிக்க ஆரோக்கியமான, சத்தான உணவுகள் மலிவு விலையில் கிடைப்பதை நாம் உறுதிபடுத்த வேண்டும்’’ என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.