TCS: அனைத்து டாடா நிறுவனங்களுக்கும் தலைமை நிறுவனமாக விளங்கும் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் என்.சந்திரசேகரனுக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ தந்து கெளரவித்திருக்கிறது அமால்கமேஷன் நிறுவனம். மெட்ராஸ் மேனேஜ்மென்ட் அசோசியேஷனௌம் அமால்கமேஷன் நிறுவனமும் இணைந்து வழங்கும் பிசினஸ் லீடர்ஷிப் அவார்ட் விருதுதான் இப்போது என்.சந்திரசேகரனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

Tata சந்திரசேகர்

கடந்த புதன்கிழமை மாலையில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில், டாஃபே நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் மல்லிகா ஶ்ரீனிவாசனின் முன்னிலையில் அமால்கமேஷன் குழுமத்தின் தலைவர் எ.கிருஷ்ணமூர்த்தி இந்த விருதினை என்.சந்திரசேகரனுக்கு அளித்தார்.

என்.சந்திரசேகரனின் தனிச்சிறப்பு மிக்க தலைமைத்து பண்பு, மனிதநேரம், தொழில் துறைக்கும் சமூகத்திற்கு அவர் வழங்கிவரும் சிறப்பான பங்களிப்பை கெளரவிக்கும் வகையில் இந்த விருதினை வழங்கி கெளரவித்துப் பாராட்டி இருக்கிறது அமால்கமேஷன் நிறுவனம். என்.சந்திரசேகரனின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமைத்துவம் டாடா சன்ஸ் குழுமத்தின் விரிவாக்கத்திற்கும் மற்றும் முன்னேற்றத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்திருக்கிறது.

TCS: டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பு இவர் ஏற்று நடத்தத் தொடங்கியபின் அவர் வகுத்த ஸ்டாரட்டஜிகள் காரணமாக அடைந்த முன்னேற்றம், புதுமை படைத்தால் மற்றும் அறஉணர்வுடன் கூடிய வணிக செயல்பாடுகள் மீது வலுவான ஈடுபாடு ஆகிய பண்புகள் இவரது சாதனைக்கு முக்கியமான காரணமாக உள்ளன.

Tata

டாடா நிறுவனத்தின் மீதும் நிறுவனத்தின் பணியாளர்களின் முன்னேற்றம் மற்றும் நலவாழ்வின் மீதும் இவர் காட்டும் அர்ப்பணிப்பு மிகுந்த அக்கறையைப் பாராட்டும் விதமாக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக அமால்கமேஷன் நிறுவனம் சொல்லி இருக்கிறது.

TCS: இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஆர்.சேஷசாயி, ”இந்த விருதுக்கு என்.சந்திரசேகரனைத் தேர்வு செய்ய எங்களுக்கு 5 நிமிடங்களே போதுமானதாக இருந்தது” என்றார்.

பெரு நிறுவனங்களின் ஆலோசகரும், பொருளாதார விமர்சகருமான எஸ்.குருமூர்த்தி, ”தலைவர் என்பவர்கள் உதாரண புருஷர்களாக இருக்க வேண்டும். இன்றைக்கு பிசினஸை அறஉணர்வுடன் செய்பவர்கள் குறைந்து வருகிறது. அந்த வகையில், அறஉணர்வுடன் சிறப்பாக பிசினஸ் செய்யும் என்.சந்திரசேகரன் மிகச் சிறந்த பிசினஸ் லீடர்” என்று பாராட்டினார்.

எஸ்.குருமூர்த்தி

பிரபல வழக்கறிஞர் அரவிந்த் தத்தா, ”ஒரு நிறுவனத்தை இப்படித்தான் நடத்த வேண்டும் என்பதற்கு டாடா நிறுவனங்கள் மிகச் சிறந்த உதாரணம். உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் வாதாடிக் கொண்டிருந்தேன். என் கட்சிக்காரர் செய்தது சரி என்பதை எடுத்துச் சொல்ல, ஒரு பெரிய நிறுவனத்தின் பேலன்ஸ் ஷீட்டை எடுத்துக் காட்டினேன். ஆனால், நீதிபதிகளோ, டாடா நிறுவனத்தின் பேலன்ஸ் ஷீட்டை உதாரணமாக காட்டி எடுத்துச் சொல்லுங்கள் என்றனர். அந்த அளவுக்கு டாடா நிறுவனத்தின் நிர்வாகம் புகழ்பெற்று விளங்குகிறது” என்றார். ஆகியோர் என்.சந்திரசேகரனின் தலைமைப் பண்பைப் புகழ்ந்து பேசினார்கள்.

TCS: இந்த விருதினைப் பெற்றுக்கொண்ட என்.சந்திரசேகரன், தான் கற்ற பிசினஸ் பாடங்கள் பற்றி பேசினார். ‘‘இது இந்தியாவுக்கான காலம். இந்தியாவில் தொழில் தொடங்க நினைக்காத பார்ச்சூன் 500 நிறுவனங்கள் இல்லை. பிசினஸ் வளர்ச்சிக்கு பிரதமர் மோடி சிறப்பான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார். இனி இந்தியா மிகப் பெரிய வளர்ச்சி காணும்’’ என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.