“ஜாமீன் வழங்குவதற்கு தகுந்த, போதுமான காரணங்கள்(no merits) ஏதும் இல்லை” – உயர் நீதிமன்றம்

செந்தில் பாலாஜி

சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. உயர் நீதிமன்றம் தனது உத்தரவில், `ஜாமீன் வழங்குவதற்கு தகுந்த, போதுமான காரணங்கள்(no merits) ஏதும் இல்லை’ எனக் கூறி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துவிட்டது. மேலும் வழக்கை விசாரித்து வரும் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் 3 மாதங்களுக்குள் விசாரணையை நிறைவு செய்ய உத்தரவு

பிரதமர் மோடி தூத்துக்குடி வருகை; 5 அடுக்கு பாதுகாப்பு!

பிரதமர் மோடி

தூத்துக்குடி, வ.உ.சிதம்பரனார் துறைமுக நிர்வாக அலுவலகத்தில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி, ரூ.17,300 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பிரதமரின் வருகையை முன்னிட்டு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 9 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் 3,000-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக மதுரையில் தங்கி இருந்த பிரதமர் மோடி, தூத்துக்குடி புறப்பட்டுச் சென்றார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட சாந்தன் சிகிச்சை பலனின்றி காலமானார்!

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட சாந்தன் கடந்த ஒரு மாத காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். முன்னதாக திருச்சி முகாமில் இருந்த அவருக்கு உடல் நல குறைவு ஏற்பட்டது. முதலில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் உயர் சிகிச்சைக்காக அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரின் உடல்நிலை மோசமானது. இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார் என மருத்துவமனை தெரிவித்துள்ளது

சாந்தன்

இலங்கையை சேர்ந்த சாந்தன் விடுதலை செய்யப்பட்ட பிறகு சொந்த நாடு திரும்ப முயற்சிகள் மேற்கொண்டு வந்தார். இது தொடர்பாக அவர் மத்திய அரசுக்கு கோரிக்கைகள் அடங்கிய கடிதமும் அனுப்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா?!

சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் இன்று காலை தீர்ப்பளிக்கிறது.

சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டாவது முறையாக தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நடைபெற்றது.

செந்தில் பாலாஜி

பிப்ரவரி 14, 15, 21ஆம் தேதிகளில் நடைபெற்ற விசாரணையின்போது செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம், அமலாக்கத் துறை தரப்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

இரு வாதங்களும் பிப்ரவரி 21-ம் தேதி முடிவடைந்த நிலையில், ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது.

இந்த நிலையில், செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீது நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் இன்று (பிப்ரவரி 28) காலை 10.30 மணிக்கு முதல் வழக்காக தீர்ப்பளிக்க உள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.