பாஜக கடந்த 2014-ல் மத்தியில் ஆட்சியமைத்த பிறகு, அதே ஆண்டு அக்டோபர் மாதம், வானொலி மூலமாக மக்களிடம் உரையாற்றும் வகையில் `மன் கி பாத் (மனதின் குரல்)’ என்ற நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கினார். அன்று முதல் ஒவ்வொரு மாதமும், மன் கி பாத் நிகழ்ச்சி வாயிலாக மக்களிடம் மோடி உரையாற்றி வருகிறார். தொடர்ச்சியாக 100 அத்தியாயங்களைக் மன் கி பாத் கடந்துவிட்டது.

Mann Ki Baat – மன் கி பாத் – மோடி

இந்த நிலையில், அடுத்த மூன்று மாதங்களுக்கு மன் கி பாத் நிகழ்ச்சி நிறுத்திவைக்கப்படுவதாக மோடி தெரிவித்திருக்கிறார்.

மன் கி பாத்தின் 110-வது அத்தியாயத்தில் இன்று மக்களிடம் உரையாற்றிய மோடி, “இன்னும் சில நாள்களுக்குப் பிறகு மார்ச் 8-ம் தேதி மகளிர் தினத்தைக் கொண்டாடுவோம். இந்தியாவின் நாரி சக்தி (பெண்கள் சக்தி) ஒவ்வொரு துறையிலும் முன்னேற்றத்தின் புதிய உச்சங்களைத் தொடுகிறது. இன்று பெண்கள் வாழ்வின் அனைத்துக் கட்டங்களிலும் வெற்றி பெற்று வருகின்றனர்.

நம் நாட்டில், கிராமப்புற பெண்களும் ட்ரோன்களை பறக்க விடுவார்கள் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு வரை யாராவது நினைத்திருப்பார்களா… ஆனால், இன்று அது சாத்தியமாகி வருகிறது. ‘ட்ரோன் தீதி’ பற்றி இன்று நிறைய விவாதங்கள் நடக்கின்றன. வரும் மக்களவைத் தேர்தலில் முதல்முறை வாக்காளர்கள் தங்களது வாக்குரிமையைப் பதிவு செய்ய வேண்டும்” என்று கூறினார்.

Mann Ki Baat – மன் கி பாத் – மோடி

அதைத்தொடர்ந்து, “வரவிருக்கும் மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு அடுத்த மூன்று மாதங்களுக்கு மன் கி பாத் நிகழ்ச்சி ஒளிபரப்பப்படாது... இருப்பினும், நாட்டின் சாதனைகள் நின்றுவிடாது. மன் கி பாத் என்ற ஹேஷ்டேக் மூலம் நாட்டின் சாதனைகளை சமூக வலைதளங்களில் பதிவிடுங்கள். தேர்தலுக்குப் பிறகு ‘மன் கி பாத்’ அதன் 111-வது அத்தியாயத்துடன் மீண்டும் தொடங்கும்” என அடுத்த முறையும் பா.ஜ.க மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வரும் என்ற எதிர்ப்பார்ப்புடன் மோடி கூறினார். வரும் தேர்தலில் பா.ஜ.க மீண்டும் வெற்றிபெற்றால் மனதின் குரல் நிகழ்ச்சியில் தொடர்ந்து மோடி பேசுவார் என்றும், ஒருவேளை தேர்தலில் பாஜக தோல்வியை தழுவினால் இதுவே மோடி உரையாற்றும் கடைசி மன் கி பாத் நிகழ்ச்சியாக இருக்கும் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.