தென்காசிக்கு புதிய தோட்டக்கலை பண்ணை

சூரியசக்தி மின்வேலிகள் அமைக்க 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

தென்காசி மாவட்டம் நடுவக்குறிச்சியில் புதிய தோட்டக்கலை பண்ணை அமைக்கப்படும்.

தனியார் வேளாண் இயந்திர வாடகை மையம் அமைக்க 32.9 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

வேளாண் இயந்திர கருவிகள் வழங்க ரூ. 170 கோடி

மரவள்ளியில் மாவுப் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்த 1 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

அரசுத் தோட்டக்கலை பண்ணைகளில் நேரடி விற்பனை மையங்கள் அமைக்க 1 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

ஐந்திணை நிலங்களின் பெருமைகளை உணர்த்தும் வகையில் பூங்காக்கள் அமைக்கப்படும்.

குளிர் பிரதேச பயிர்களான பேரிக்காய், பிளம்ஸ் உள்ளிட்ட பயிர்களை ஊக்குவிக்கவும் நிதி ஒதுக்கீடு.

வேளாண் இயந்திர கருவிகள் வழங்க 170 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

கன்னியாகுமரியில் சூரியத் தோட்டம்…

கன்னியாகுமரியில் சூரியத் தோட்டம் அமைக்கப்படும்.

செம்பருத்தி நடவு செடிகள் உற்பத்தி மையம் செங்கல்பட்டு மாவட்டம், ஆத்தூரில் அமைக்கப்படும். இதற்கு 1 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

பலா சாகுபடியை ஊக்குவிக்கவும், கூடங்கள் அமைக்கவும் 1.14 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் சூரியத் தோட்டம் அமைக்க 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

தஞ்சாவூர் மாவட்டத்தில் மருதம் பூங்கா அமைக்கப்படும்.

வாழை ரகங்களை ஊக்குவிக்க 12.73 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

நுண்ணீர் பாசன திட்டத்துக்கு ரூ.773 கோடி

செங்காந்தள், நித்ய கல்யாணி போன்ற மூலிகை பயிர்களின் சாகுபடியை ஊக்குவிக்க 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.

நுண்ணீர் பாசன திட்டத்துக்கு 773 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

மிளகாய் சாகுபடியை ஊக்குவிக்க 3.67 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

முந்திரி சாகுபடியை ஊக்குவிக்க 3.36 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

உதகமண்டலம் ரோஜா பூங்காவில் புதிய ரோஜா ரகங்கள் அறிமுகப்படுத்தப்படும்.

ஏற்றுமதிக்கு உகந்த மாம்பழ ரகங்களின் உற்பத்தியை அதிகரிக்க 27.48 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

தரிசு நிலங்களை விளைநிலங்களாக்க ரூ.200 கோடி

வறண்ட நிலங்களில் ஒருங்கிணைந்த தோட்டக்கலை பயிர்களின் சாகுபடியை ஊக்குவிக்க 3.64 கோடி ஒதுக்கீடு.

கரும்பு சாகுபடியை மேம்படுத்த 20.43 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

முக்கனி மேம்பாட்டு சிறப்புத் திட்டம் 41.35 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

தென்னை தொடர்பான தொழில்களை ஊக்குவிக்க 12.5 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

நுண்ணீர் பாசனம் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்

நெல் ஜெயராமன் மரபுசார் நெல் இரகங்களை பாதுகாக்க 200 மெ.டன் பாரம்பரிய நெல் இரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு 10,000 ஏக்கரில் சாகுபடி மேற்கொள்ள ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு.

ரூ. 5 கோடி மாநில நிதியில் 100 உழவர் அங்காடிகள் செயல்படுத்தப்படும்.

தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றி, விவசாயிகளுக்கு கொடுக்க ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட கிராம ஊராட்சிகளில் ரூ.200 கோடி நிதியில் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

அனைத்து பயிர்களின் உற்பத்தியில் தன்னிறைவு பெறும் நோக்கில் 4,75,000 பரப்பில் அதிகரிக்க ரூ.40.27 கோடி மத்திய மானிய நிதி ஒதுக்கீடு.

பாரம்பரிய உணவு வகைகள் பாதுகாக்கப்படும்.

சீரக சம்பா போன்ற பாரம்பரிய நெல் வகைகள் 1,000 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிர் செய்ய வழங்கப்படும்.

பாரம்பரிய உணவு வகைகள் பாதுகாக்கப்படும்.

பஞ்சகவ்யம், மண்புழு உரம் தயாரித்து விற்பனை செய்ய ஆர்வமுள்ள குழுக்களுக்கு ரூ.1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.

சிறிய, பெரிய நாற்றங்கால் அமைக்க வேளாண் காடுகள் திட்டத்திற்கு ரூ.13 கோடி ஒதுக்கப்படும்.

ஒருங்கிணைந்த பண்ணை தொடங்க ரூ.42 கோடி நிதி ஒதுக்கீடு.

வாழை, பப்பாளி உள்ளிட்ட பழ வகைகளை வீடுகள் மற்றும் தோட்டங்களில் வளர்க்க ஊக்கிவிக்கப்படும்.

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் சீவன் சம்பா பாரம்பரிய நெல் இரகங்கள் 1000 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்ய விதை விநியோகம் செய்யப்படும்.

எண்ணெய் வித்துப் பயிர்களின் சாகுபடியை விரிவாக்கம் செய்திட ரூ.45 கோடி நிதி ஒதுக்கீடு.

துவரை சாகுபடியை 50,000 ஏக்கர் பரப்பில் செயல்படுத்த ரூ. 17.50 கோடி நிதி ஒதுக்கீடு.

தென்மாவட்ட மழைக்கு நிவாரணம் வழங்க ₹208 கோடி

கடந்த டிசம்பரில் தென்மாவட்டங்களில் பெய்த மழையால் ஏற்பட்ட பயிர் சேதத்தால் பாதிக்கப்பட்ட 2 லட்சம் விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் இதற்காக ₹208 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

10,000 விவசாயிகளுக்கு தலா இரண்டு மண்புழு உரப்படுக்கைகள் வழங்கிட ₹6 கோடி மானியம்.

பூச்சி மேலாண்மை செய்வது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்படும்.

அமிலம் கலந்த நிலத்தை சீர்படுத்த ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு.

பூச்சிநோய் தாக்கத்தை கட்டுப்படுத்த 10 லட்சம் வேப்ப மர கன்றுகள் இலவசமாக வழங்கப்படும்.

வரும் நிதியாண்டில் 127 லட்சம் மெட்ரிக் டன் உணவு உற்பத்திக்கு இலக்கு.

மண்வளத்தை பேணிக் காக்கவும், மக்கள் நலன் காக்கும் விதமான உயிர் வேளாண்மை போன்ற அனைத்து செய்முறைகளையும் ஊக்கப்படுத்த ‘முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம்’ என்ற புதிய திட்டம் ரூ.206 கோடி நிதியில் செயல்படுத்தப்படும்.

ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்போருக்கு நடைமுறை முதலீட்டுக் கடனுக்கான வட்டி மானியத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு.

மண் பரிசோதனைக்கு ₹6.27 கோடி

பயிற்சி பெற்ற பண்ணை மகளிர் சுய உதவிக் குழுக்கள் தென்னை நாற்றுப்பண்ணைகள் அமைத்திட ரூ.2.40 கோடி நிதி ஒதுக்கீடு.

உணவுப் பாதுகாப்பினை உறுதி செய்யும் உணவு மானியத்திற்கு ரூ.10,500 கோடி ஒதுக்கீடு.

தமிழ்நாடு அரசின் நெல் கொள்முதல் ஊக்கத் தொகை வழங்குவதற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு.

2,482 கிராம ஊராட்சிகளில் 2 லட்சம் விவசாயிகளின் நிலத்தில் மண் பரிசோதனைக்கு ₹6.27 கோடி நிதி ஒதுக்கீடு.

மானாவாரி நிலங்களில் உற்பத்தி ஊக்குவிப்பு திட்டம்; சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் பயிரிட ரூ.36 கோடி நிதி ஒதுக்கீடு.

கரும்பு ஊக்கத்தொகை: 1 டன்னுக்கு ரூ.215

சிறுதானியங்கள், பயறு வகைகள், கரும்பு சாகுபடியில் அதிக மகசூல் எடுக்கும் விவசாயிகளுக்கு பரிசு வழங்கப்படும்.

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக 1 டன்னுக்கு 215 ரூபாய் ஒதுக்கீடு.

பருத்தி சாகுபடிக்கு 14.20 கோடி ஒதுக்கீடு…

பலன் தரும் பருத்தி என்ற பெயரில் பருத்தி சாகுபடியை ஊக்குவிக்க 14.20 கோடி ஒதுக்கீடு.

புதிய ரக கரும்பு விதைகள் வழங்க 7.92 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

சர்க்கரை ஆலைகளின் செயல்திறனை அதிகரிக்க 12 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

1 டன் கரும்புக்கு 215 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும். இதன்மூலம் 250 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

வேளாண் தொழில்முனைவோருக்கு ரூ.1 லட்சம்

ஆதி திராவிடர், பழங்குடியின விவசாயிகளுக்கு மானிய வழங்க 18 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

வேளாண் பட்டதாரிகளை தொழில்முனைவோராக உருவாக்க ஒருவருக்கு ரூ.1 லட்சம் வீதம் 100 பேருக்கு வழங்கப்படும்.

சிறந்த விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்க ரூ.5 லட்சம் ஒதுக்கீடு.

வீட்டுத்தோட்டத்துக்கு செடிகள்…

தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்துக்கு 65 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

வீட்டுத்தோட்டத்துக்கு செடிகள் வழங்கப்படும்.

பப்பாளி, கறிவேப்பிலை போன்ற செடிகள் வழங்க முடிவு.

15,280 கிராமங்களில் ஒரு பயிர், ஒரு கிராமம் திட்டத்தில் பயன்பெறும்.

எள் சாகுபடி பரப்பை விரிவாக்க செய்ய 3 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

நெற்பயிருக்கு மாற்றாக 1 லட்சம் ஏக்கரில் மாற்றுப்பயிர் சாகுபடி செய்ய 12 கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும்.

ஒரு கிராமம், ஒரு பயிர்…

நெல் சாகுபடியில் நுண்ணூட்ட உரக்கலவை வழங்க 3 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

ஒரு கிராமம், ஒரு பயிர் என்ற புதிய திட்டம் அறிமுகம்.

சிறப்பு வேளாண் கிராமங்கள்..

பயிர் உற்பத்தி திறன் ஊக்குவிப்பு திட்டத்துக்கு 48 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

துவரை சாகுபடி பரப்பு விரிவாக்க இயக்கம் செயல்படுத்தப்படும்.

சிறப்பு வேளாண் கிராமங்களை உருவாக்க முடிவு.

பயிர் உற்பத்தி திறன் ஊக்குவிப்பு திட்டத்துக்கு 48 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

குமரியில் தேன் பதப்படுத்தும் கூடங்கள்..

குமரி மாவட்டத்தில் தேன் பொருட்களுக்கான பரிசோதனை, பதப்படுத்தும் கூடங்கள் அமைக்க ரூ.3.60 கோடி ஒதுக்கீடு.

ரசாயன உரங்களின் பயன்பாட்டைகுறைக்க மண்வள அட்டை வழங்கப்படும்.

எண்ணெய் வித்து பயிர்களின் சாகுபடியை அதிகரிக்க 45 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

சிறுதானிய சாகுபடிக்கு ரூ.36 கோடி ஒதுக்கீடு

சிறுதானிய உணவுப் பொருள்கள்

சிறுதானியங்கள், பயறு வகைகள் சாகுபடிக்கு தொடர்ந்து நிதியுதவி வழங்கப்படும். ரூ.36 கோடி ஒதுக்கீடு

ரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைக்க 6.27 கோடி ஒதுக்கீடு.

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் சிவன் சம்பா நெல் ரகத்தை சாகுபடியை ஊக்குவிக்கப்படும்.

உயிர்ம் வேளாண் தொகுப்புகளுக்கு ரூ.27 கோடி ஒதுக்கீடு.

சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துகள் சாகுபடிக்கு 36 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

இயற்கை விவசாயத்துக்கு முக்கியத்துவம்…

பாரம்பர்ய நெல் ரகங்களை பாதுகாக்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு.

ஆடாதொடா, நொச்சி போன்ற உயிர் பூச்சிக் கொல்லி செடிகளை வளர்க்க 1 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

இயற்கை விவசாய முறைகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படும்.

குமரி மாவட்டத்தில் 3.60 கோடியில் தேனீ முனையம் உருவாக்கப்படும்.

ஒருங்கிணைந்த பண்ணைய தொகுப்புகள் அமைக்க நிதியுதவி.

வேளாண்மைக்கான மாதிரி பண்ணைகளை உருவாக்க 38 லட்சம் ஒதுக்கீடு.

இலவசமாக வேப்ப மரக்கன்றுகள்…

வேப்ப மரங்கள்

10 லட்சம் வேப்ப மரக்கன்றுகள் வழங்க 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

வேப்ப மரங்களை பரவலாக்க 10 லட்சம் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படும்.

பூச்சி, நோய்த்தாக்குதலை தடுக்க நடவடிக்கை..

கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்துக்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

பாரம்பர்ய நெல் ரகங்களை பாதுகாக்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு.

ஆடாதொடா, நொச்சி போன்ற உயிர் பூச்சிக் கொல்லி செடிகளை வளர்க்க 1 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

206 கோடியில்  `மண்ணுயிர் காப்போம்’  திட்டம்

களர் அமில நிலங்களை சீர்பத்த 22.5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

முதலமைச்சரின் மண்ணுயிர் காப்போம் திட்டத்துக்கு 206 கோடி ரூபாய் ஒதுக்கீடு

மண்புழு உரத்தொட்டிகள் அமைக்க 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

ஒரு விவசாயிக்கு 2 மண்புழு உரப்படுக் கை வீதம் 10,000 விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

பாசன பரப்பு உயர்வு..

கடந்தாண்டு கரும்பு விவசாயிகளுக்கு 260 கோடி ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

127 லட்சம் மெட்ரின் டன் உணவுத் தானியங்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2022/23 ஆண்டில் பாசன பரப்பு 95,39,000 ஏக்கராக உயர்வு

2024/25ல் முதலமைச்சரின் மண்ணுயிர் காப்போம் திட்டத்துக்கு 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு. இதன்மூலம் 2 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவர்.

4773 குளங்கள், கால்வாய்கள் தூர்வாரப்பட்டுள்ளன

மண்ணுயிர் காப்போம் புதிய திட்டம்…

45 லட்சம் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

மொத்த உணவுத் தானிய உற்பத்தி 116 டன் களாக உயர்ந்துள்ளது.

25 லட்சம் விவசாயிகளுககு 4436 கோடி பயிர் காப்பீடு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

தாவிக் குதிக்கும் குழந்தையைப் போன்று வேளாண் பட்ஜெட் உள்ளது.

கடந்த வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட அனைத்து அறிவிப்புகளுக்கும் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னையிலும், திருச்சியிலும் வேளாண் சார்ந்த பிரமாண்ட கண்காட்சிகள் நடத்தப்பட்டன.

மண்ணுயிர் காப்போம் என்ற புதிய திட்டம் அறிமுகம்

கடந்தாண்டு கரும்பு விவசாயிகளுக்கு 260 கோடி ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

127 லட்சம் மெட்ரின் டன் உணவுத் தானியங்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மானிய விலையில் வேளாண் கருவிகள்…

வேளாண் கருவிகள்

மானிய விலையில் வேளாண் கருவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.

வேளாண் இயந்திரங்களை விவசாயிகள் வாடகைக்கு பயன்படுத்தும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

2020/21 ஆண்டில் 85 லட்சம் ஏக்கராக இருந்த சாகுபடி பரப்பு 95 லட்சம் ஏக்கராக அதிகரித்துள்ளது.

1564 பண்ணைக்குட்டைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

45 லட்சம் டென் நெல் கொள்முதல்…

நெல் கொள்முதல்

கலைஞர் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் 7500 கிராமங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது

தென்னங்கன்றுகள், மரக்கன்றுகள், பண்ணைக்குட்டைகள் உள்ளிட்டவை இந்த கிராமங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தென்னங்கன்றுகள், மரக்கன்றுகள், பண்ணைக்குட்டைகள் உள்ளிட்டவை இந்த கிராமங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு 45 லட்சம் டென் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

கரும்பு 1 டன்னுக்கு 195 ரூபாய்…

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்

கரும்பு 1 டன்னுக்கு 195 ரூபாய் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது…

இதன்மூலம் 260 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது.

தமிழகத்தின் சாகுபடி பரப்பளவு அதிகரித்துக் கொண்டு செல்கிறது.

தமிழகத்தின் சாகுபடி பரப்பளவு அதிகரித்துக் கொண்டு செல்கிறது.

தமிழகத்தின் சாகுபடி பரப்பு 155 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது.

கூடுதலாக 50,000 இலவச மின் இணைப்புகள்..

உழவர்களை உச்சத்தில் வைக்கிறது தமிழ்ச் சமூகம்…

வேளாண் பட்ஜெட் விவசாயிகளின் வாழ்க்கைத் த ரத்தை மேம்படுத்தியுள்ளது.

1,50,000 மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தாண்டில் கூடுதலாக 50,000 இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட உள்ளன.

– எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.

குறளுடன் பட்ஜெட் உரை…

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்

தமிழக சட்டப்பேரவையில் பச்சைதுண்டுடன் உள்ளே வந்தார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்… சபாநாயகர் உரையை தொடர்ந்து

2024- 25ம் நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம்

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்

தொழுதுண்டு பின்செல் பவர்…”

என்ற குறளுடன் 2024/25ம் ஆண்டுக்கான பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கினார்.

2020-2021ம் ஆண்டில் 152 லட்சம் ஏக்கராக இருந்த வேளாண் சாகுபடி பரப்பு, 155 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது-வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.

கடந்த ஆண்டு 45 லட்சம் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

வேளாண் பணிகளுக்கான ஊதியம் தற்போது அதிகமாக உள்ளது.

இதனை எதிர்கொள்ள வேளாண் பணிகளுக்கு தேவையான அனைத்து வகையான வேளாண் இயந்திரங்களும், கருவிகளும் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன.

கலைஞர் வேளாண் திட்டம் 7,075 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க, வேளாண் பொருட்களை தமிழ்நாடு அரசே கொள்முதல் செய்கிறது.

4-வது வேளாண் பட்ஜெட்டை…

தமிழக சட்டப்பேரவையில் நேற்று பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, பேரவையி்ல் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண்துறைக்கு என தனி பட்ஜெட்டை இன்று காலை தாக்கல் செய்கிறார்.

திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி, ஆட்சி பொறுப்பேற்றது முதல் தமிழ்நாட்டிற்கு தனி வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறது.. கடந்த 2021 ஆகஸ்ட் 14ஆம் தேதி அன்று முதல் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

தேர்தல் நெருங்கும் சமயத்தில், இன்று 4-வது முறையாக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

இன்றைய வேளாண் பட்டஜெட்டில் விவசாயிகளுக்கான புதிய அறிவிப்புகள் இடம் பெறும் என்று மிகுந்த எதிபார்ப்புடன் உள்ளனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்டும் பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களை இந்த லைவ் பக்கத்தில் காணலாம்..

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.